வாசகர் கருத்து (49)

 • padma rajan -

  தீபாவளி என்றாலே பட்டாசுக்கு தான் முக்கியத்துவம். எங்கள் காலத்தில் நாங்கள் ஒரு மாதம் முன்பே பட்டாசு வெடிக்க ஆரம்பிப்போம் எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது இரவில் இரண்டு மணிக்கு கூட வெடிப்போம். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் பட்டாசு வெடிப்பது அவ்வளவு ஆர்வம் அதுதான் தீபாவளி. அதிகாலை நான்கு மணிக்கு தலையில் என்னை வைத்துக்கொண்டு சரவெடி வைப்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். அதை மாற்றி ஆறு மணிக்கு தான் குடிக்க வேண்டும் என்றால் தீபாவளியின் முக்கியத்துவமே இல்லாமல் போய்விட்டது. வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகைக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் வைத்தால் பண்டிகை தலை இழந்துவிடும். தமிழர் பண்டிகைகளின் எல்லாவற்றையும்விட முக்கியமான பண்டிகை தீபாவளிதான். அதுவும் அதிகாலையிலேயே ஊரெல்லாம் வெடி சத்தம் கேட்பதுதான் மக்களுக்கு சுவாரஸ்யமான அனுபவம். இப்பொழுதெல்லாம் யாரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளிப்பதில்லை எல்லாம் மாறிவிட்டன எனவே சட்டதிட்டங்களும் மாறிவிட்டன. தீபாவளியன்று ஐந்து மணிக்கு முன்னரே ஸ்நானம் செய்வது தான் மரபு. அதன் பிறகு புத்தாடை உடுத்தி இனிப்புகளை பகிர்ந்துகொள்வது ஆலயங்களுக்கு செல்வது பிறகு காலை 8 மணி ஒன்பது மணிவாக்கில் ஒரு சுவாரசியமான குட்டித் தூக்கம் போடுவது எல்லாம் ஒரு கடந்தகால அனுபவங்கள் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போதெல்லாம் சூரியன் வந்த பிறகு கூட தீபாவளியன்று நிதானமாக எழுந்து வருகிறார்கள் மக்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  போன வருடம் good friday அன்று இரவு இரண்டுமணிவரை எங்கள் பக்கத்துக்கு தெருவில் உள்ள சர்ச் எதிரில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கு எதாவது கட்டுப்பாடு உண்டா ? போலி மதசார்பற்ற நாடு என்று சொல்லுவீர்களா ?

 • Ramanan -

  Diwali is a festival which is celebrated only once in a year. Vehicles with no proper pollution control norms run throughout the year.Government should stop the vehicles which adds to pollution rather than to control diwali.

 • J.Isaac - bangalore,இந்தியா

  கேரளாவில் சபரிமலையை வைத்து அரசியல் ஆட்டம் நடத்தியது போல் தமிழ் நாட்டில் வெற்றி பெறமுடியாத காழ்புணர்ச்சியோடு மத்திய அரசு நீதிமன்றத்தின் துணையோடு சிறு குறு தொழிலில் திறமையோடு முன்னேறும் ஒரு குறிப்பிட்ட இனத்தை நசுக்கி மத நல்லிக்கணத்தை கெடுத்து அரசியல் லாபம் அடைய செய்கிற சதி. இந்து துப்புரவு தொழிலார்கள் இந்து சலவை தொழிலாளிகள் சலூன் கடை வைத்திருக்கும் இந்துக்கள், பனையேறும் இந்து தொழிலாளிகள் தள்ளு வண்டி வியாபாரிகள் கூலி தொழிலாளிகள் எல்லாருமே சிறுபான்மையர்தான். பட்டாசு சுற்று சூழலை மாசுபடுத்துகிறது. அதுபோல் பீடி சிகரெட் மது போதை வஸ்துக்கள் உடலை மாசு படுத்துகிறதே. அதையும் தடைசெய்ய வேண்டியது தானே

 • mannandhai - ,

  ப‌ட்டாசு என்ப‌து வெடி வ‌ழிபாடு என்ப‌த‌ன் நீட்சி. வெடி வ‌ழிபாடு என்ப‌து, ப‌ண்டைய‌ கால‌ங்க‌ளில் திருவிழா ந‌ட‌க்கும் இட‌ங்க‌ளுக்கு அருகில் மிருக‌ங்க‌ள் வ‌ருவ‌தைத் த‌டுக்க‌வே. இப்போதும் வெடிவ‌ழிபாட்டிற்கும் ப‌ட்டாசுக்கும் என்ன‌ வேலை காசை க‌ரியாக்குவ‌தைத் த‌விர‌. ப‌ட்டாசிற்கு முழுத‌டை விதிக்க‌ வேண்டிய‌ த‌ருண‌ம் இது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்