வாசகர் கருத்து (20)

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  விரைவில் நம்பர் 2 இடத்தில் மோடி: இந்தியா நம்பிக்கை

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வாழ்த்துகள். நம்பிக்கையைத்தான் சாதனையின் முதல்படி. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதே நம்பிக்கை கொண்டு உறுதியோடும் தீரத்தோடும் அவரவர் துறையில் பணியாற்ற வேண்டும். நமது காலத்திலேயே இந்திய திருநாட்டை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்லவேண்டும். அது மிகவும் எளிதான செயல். ஒன்று அத்தகு எண்ணம் கொண்ட தலைவர் இருப்பது. இரண்டு அவருக்கு தோள்கொடுத்து உதவுவது. இளைஞர்கள் நாட்டில் மிக்க நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நமது பாரதம் என்றுமே இளைய பாரதம் தான். நாமும் முன்னேறி நாட்டையும் உயர்த்துவோம். ஜெய்ஹிந்த்.

 • Pachiappan - bengaluru,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியில் கொள்ளையடித்த தங்கள் குடும்ப சொத்துக்கள் மூலம் உலகின் பெரிய பணக்காரர் பட்டியலில் உயர்ந்த இடம் பெறுவதே ஒற்றை குறக்கோளாக வைத்து சாதனை புரிந்தார்கள். அதனை பார்க்கும் போது நாட்டை சிறந்த பொருளாதார நாடுகள் பட்டியலில் எங்கோ மறைந்திருந்த இந்தியாவை ஆறாவது இடத்திற்கு கொண்டு வந்ததால் அது சாதனையா? இங்கு கருத்தெழுதிய அறிவு ஜீவிகள் நாட்டின் தற்போதைய முன்னேற்றம் பிரதமர் மோடி முயற்சியின்றி தானாக நிகழ்ந்ததாக உளரியிருக்கிறார்கள். அது ஏன் அறுபது வருடமா காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறவில்லை? பவுண்டேஷன் ஸ்டோன் அவ்வளவு ஸ்ட்ராங்க போட்டுட்டே இருந்து அடுத்த ஆட்சி காரங்க பேர் வாங்கட்டும்ன்னு பெருந்தன்மைய காத்திருந்தாங்களா? அப்புறம் உலகின் நான்காவது பெரிய பணக்காரியாமே பப்புவோட தாயார், எந்த வருமானம் மூலம் உயர்ந்தார்கள்? விளக்கம் தர முடியுமா?

 • miyaavu - chennai,இந்தியா

  இப்படியே சொல்லி தான் அஞ்சு வருஷம் ஏமாத்துனீங்க. நாசமாக்குனது போதும். இடத்தை காலி பண்ணுங்க.

 • ravisankar K - chennai,இந்தியா

  எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி உண்டு .முக்கியமாக ஆந்திர , தெலுங்கானா , கர்நாடக , குஜராத் , மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் . தமிழ் நாடு பற்றி தெரியாது ...எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அம்பானி , அதானி, டாடா , பிர்லா போன்றோர் மேலும் மேலும் வளர்ச்சி பெறுவார்கள் ..கார்பொரேட் கம்பெனிகள்தான் வரி செலுத்துவது ... ...விவசாயிகள் விளை பொருளை சேமித்து நல்ல விலையில் விற்க வேண்டும் . அதற்கு போராட வேண்டும் . கடன் தள்ளுபடி மட்டும் கேட்டால் எந்த கட்சியும் உதவ போவதில்லை .....

 • Ajit Kumar - Chennai,இந்தியா

  நீங்கள் வாயை திறந்தாலே பொய் தான் வருமா, கடவுள் நம்பிக்கை கொஞ்சமாவது இருக்கா உங்களுக்கு, மதத்தின் பெயரை வைத்து மக்களை மட்டும் ஏமாத்துகிறீர்கள், நீங்கள் மதத்தில் சொல்வது போல் நேர்மையை பின்பற்ற மாட்டிங்களா, உங்கள் கட்சியினரும் நீங்களும் இப்படி பொய்ய சொல்லிக்கொண்டு இருக்கிறீரே

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  எதுல மோடி ஜி . கொள்ளை அடிக்க வழி செய்து கொடுக்கும் அரசியல் வாதியா இல்லை சட்டமா ?

 • Visu Iyer - chennai,இந்தியா

  இவரை இன்னமும் இந்திய வாக்காளர்கள் நம்ப தயாராக இல்லை.. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தான் உயர் பதவிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் இப்போது புரிந்து இருக்கிறார்கள்.. இவரூம் இந்த கட்சியும் தேர்தலில் நிற்காமல் இருப்பது தான் இந்தியர்களுக்கும் இந்திய வாக்காளர்களுக்கு இவர் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று (உலகில் உள்ள) அனைத்து இந்தியர்களும் விரும்புகிறார்கள்..

 • chander - qatar,கத்தார்

  நீங்கள் அதை பொருளாதார சீர் கேடு செய்யாதீர்கள் ஏழை மக்கள் அதிகம் உள்ளநாடு ஊழலில் இரண்டாவது இடத்தில் உள்ளது

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  2030 -இல் இந்தியா பொருளாதாரத்தில் இரண்டாவது இடம் என்பது...வாய்ப்பே இல்லை. ஆனால் நம் நாடு . பொய்,பித்தலாட்டம்,ஊழல் இவற்றில் முதல் இடம் வகிக்கும்.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  இதெல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் போட்ட அடித்தளத்தில் வந்தது. கடைசியில் வந்து ரிப்பன் வெட்டிட்டு எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்றல் எப்படி?

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  இவரது நம்பிக்கையை இனி மக்கள் நம்ப மாட்டார்கள் ..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இந்தியா அப்படி ஆகக்கூடாது ...... அதனால் மீண்டும் ஆரிய, பாசிச பாஜக ஆட்சி வரக்கூடாது ....

 • JIVAN - Cuddalore District,இந்தியா

  சொல்வதெல்லாம் பொய்

 • sripa - muscat,ஓமன்

  வாழ்த்துக்கள் மோடி ஜி. உங்கள் சேவை தொடரட்டும்.

 • Raja - Trichy,இந்தியா

  Per capitala எத்தனையாவது இடம். 2000 ல இருந்தே இந்தியா GDP ல வளர்த்து வருகிறது. ஏதோ இவர் வந்து சாதிச்ச மாதிரி ஒரு அபிமானம், மிகவும் வருந்த கூடிய செயல்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  நீங்க இருந்தால் கண்டிப்பாக ரெண்டாவது இடத்துக்கு வரமுடியாது கடைசி இடத்துக்கு போயிரும். உங்களுக்குத்தான் விவசாயி பிடிக்க மாட்டேன்கிறது நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் செய்ய மாட்டேங்கறீர்கள். ஏழைகளை உங்களுக்கு சுத்தமா பிடிக்காது அம்பானி அதானி போன்றோரை தான் பிடிக்கும். உங்கள் ஆட்சி முடியும் பொழுது ஊழல் பற்றி தெரிய வரும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்