dinamalar telegram
Advertisement

மூன்று நாட்கள் பொறுங்கள் : ராதே ஷ்யாம் இயக்குனர் வேண்டுகோள்

Share
மூன்று நாட்கள் பொறுங்கள் : ராதே ஷ்யாம் இயக்குனர் வேண்டுகோள் Entertainment பொழுதுபோக்கு

பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காதல் பின்னணியில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனாலும் இந்தப்படத்தின் அப்டேட் குறித்து சமீபகாலமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார், தனது டுவிட்டர் பக்கத்தில் “இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.. மூன்றே நாட்கள் பொறுத்திருங்கள் அன்பான டார்லிங் (பிரபாஸ்) ரசிகர்களே. அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாக போகிறது” என வேண்டுகோள் வைத்து பிரபாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement