dinamalar telegram
Advertisement

பஹத் பாசில் படத்தை தள்ளிவைத்த அல்போன்ஸ் புத்ரன்

Share
பஹத் பாசில் படத்தை தள்ளிவைத்த அல்போன்ஸ் புத்ரன் Entertainment பொழுதுபோக்கு

நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் தற்போது பாட்டு படத்தை அல்போன்ஸ் புத்ரன் தள்ளிவைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் தற்போது பஹத் பாசில் தெலுங்கு மொழியிலும் நடிக்க துவங்கி பிஸியாகி விட்டதால், பாட்டு படத்தை துவங்க இன்னும் பல மாதங்கள் ஆகுமாம். அதேசமயம் பிரித்விராஜூக்காக இவர் தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்ல, பிரித்விராஜும் அந்த கதையை ஒகே பண்ணி விட்டாராம். அதனால் பிரித்விராஜ் படத்தை முதலில் ஆரம்பிக்கும் பணியில் இறங்கி இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்ரன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement