Advertisement

மகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு

Share
மகேஷ்பாபு தத்தெடுத்த கிராமத்திற்கு தடுப்பூசி பணிகள் நிறைவு Entertainment பொழுதுபோக்கு

கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த இரண்டு கிராமங்களையும் கடந்த 2015ல் தத்து எடுத்திருந்தார் மகேஷ்பாபு. இதில் புர்ரிபலேம் என்பது மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் சொந்த ஊர் ஆகும்.

இந்த நிலையில் புர்ரிபலேம் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த வாரம் துவங்கியது. நேற்று ஏழாவது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை தடுப்பூசி முகாம் நடைபெற்ற புகைப்படங்களுடன், மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Manian - Chennai,ஈரான்

    ஓட்டை விற்று, எங்கள் ஜாதி, எங்கள் இனம், 69% தகுதி இல்லாத தலைவர்களை தேர்ந்தெடுப்பவர்கள், மாமூலர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பவர்கள், அதே 69% பயனாளிகளிடமே உதவியை எதிர் பார்க்க வேண்டும்? எங்கேயோ இடிக்குதே

  • ராஜ்,, வேலூர் மாவட்டம், தமிழக ஒன்றியம் - ,

    இங்கோயும் இருக்கானுங்க நடிகன்னு சொல்லிக்கிட்டு

    • vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

      இங்கே இருக்கற நடிகர்கள் பேசின பேச்சுக்கும், துட்டை வாங்கி கொண்டு அடித்த வசனங்களுக்கும் , ஆளுக்கு ஒரு கிராமத்தை தாது எடுத்து இருந்தாலே போதும், தமிஹ நாடு முழுதும் தடுப்பொசி போட்டுரலாம், தேவையானதை வீட்டுனுக்கே அனுப்பி வைத்து கூரான தொற்றை தடுத்து இருக்கலாம்.கல்யாண மண்டபங்கள் கட்டியதற்கு பதில் ஐம்பது படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனைகளை கட்டி இருக்கலாம்.வசனம் பொது எங்கேயோ நாலணாவுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று பேசியவனாவது இப்படி ஒரே ஒரு மருத்துவமனை கட்டி நூறு ரூபாய்க்காவது மருத்துவம் பார்க்க வசதி செய்து இருக்கலாம்.எல்லாம் சுய நலத்திற்காக, சேர்ந்த மதத்திற்காக உதார் விட்டார்கள்.

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    ஊரை நேசிக்கிற ஒவ்வொருவரும் இப்படி ஏதாவது செய்யலாம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement