Advertisement

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வசதியை ஏற்படுத்தி தந்த ஹூமா குரேஷி

Share
கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வசதியை ஏற்படுத்தி தந்த ஹூமா குரேஷி Entertainment பொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கொரோனா தொற்றின் முதல் அலை வீசும்போதே பல சமூக பணிகளை செய்தார். தற்போது இரண்டாம் அலை வீசும் நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் செய்யப்படுகிறது. இதனை அவர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த செய்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் உருவாக்கும் மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வந்து விட்டது. விரைவில் இந்த பணி முடிவடையும் என்று தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி தமிழில் ரஜினி ஜோடியாக காலா படத்தில் நடித்தார். தற்போது அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பெல்பாட்டம் என்ற படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து முடித்திருக்கிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Manian - Chennai,ஈரான்

    சட்ட ஒழுங்கு முறை அமுல், மாமூல் கலாசாரம் ஒழிவு (95%) இல்லாதவரை எவர் உதவியும் பலன் தராது

  • Sathish kumar - ,

    இந்த நல்ல விஷயத்தில் உறுதுணையாக ஹாலிவுட் இயக்குனர் ஜாக் ஸ்னைடர் பெயர் இந்த செய்தியில் ஏன் இடம்பெற வில்லை.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement