Advertisement

காதலருடன் லாக்டவுனில் ஸ்ருதிஹாசன்

Share
காதலருடன் லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் Entertainment பொழுதுபோக்கு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'லாபம்' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி வெளிப்படையாகக் கருத்துக்களைப் பகிர்பவர் ஸ்ருதிஹாசன். இதற்கு முன்பு மைக்கேல் கோர்சேல் என்ற வெளிநாட்டவர் ஒருவரைக் காதலித்த போதும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அவரை விட்டுப் பிரிந்து தற்போது சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார் ஸ்ருதி. சில வாரங்களுக்கு முன்பு காதலரை சென்னைக்கு அழைத்து வந்து அப்பாவிடமும் அறிமுகம் செய்து வைத்தார் என்று செய்திகள் வந்தன.

இந்த லாக்டவுனில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அவருடன் இருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன்... நன்றி, இரண்டு பைத்தியங்கள், சுவையான உணவு, கிரியேட்டிவிட்டி, கலை, பேச்சு, மகிழ்ச்சியான அதிர்வுகள்..” எனப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவுக்கும் ஐந்து லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • mei - கடற்கரை நகரம்,மயோட்

    இந்த செய்தி தேவையா

  • Tamilan - California,யூ.எஸ்.ஏ

    போனா வராது பொழுது போனா கிடைக்காது...

  • Girija - Chennai,இந்தியா

    கன்றாவி குடும்பம்

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    no discipline in your life?

  • Sundarr Perumal Covai -

    அப்பா வழி மகள் வழி

    • VELAN S - Chennai

      அப்பா ஒரு கட்சி தலைவரு , இதை பற்றி பத்திரிகை நிருபர் ஒருத்தரும் வாயை திறப்பது இல்லை போலிருக்கு . அப்பா ஆன் கல்யாணமாகமால் அஞ்சு பெரு கூட குடும்பம் நடத்தினாலும் ஒன்னும் ஆகாது , ஆனால் பெண் என்றால் நாலு பேர் நாறடிப்பாங்களே , அதை பற்றி கவலை படாமல் கமல் தன மகளை சினிமாவுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டார் . அந்த பெண் சுருதி நாய் குட்டியை மாத்துகிற மாதிரி காதலனை மாத்திக்கிட்டு இருக்குது . ஸ்ருதியிடம் நிறைய காசை சுருட்டியவுடன் , அந்த காதலன் கைக்கு அடக்கமான வேறொரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி கொண்டு ஓடிவிடுவான் . பாவம் சுருதி என சொல்ல வேண்டியிருக்கு .

  • RG RG - Chennai,யூ.எஸ்.ஏ

    EMI கட்டியாச்சா

  • அருணாசலம், சென்னை. - ,

    இரண்டு பைத்தியங்கள். அதற்கு 5 லட்சம் பைத்தியங்கள் விருப்பம்.

    • agni - chennai,இந்தியா

      பிக் பாஸ் எதுக்கு இப்படிப்பட்ட கலாச்சாரத்தை,நாகரிகத்தை, இத்தனை பைத்தியங்களையும் உருவாக்க தானே?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement