
பாலா - ஆர்.கே.சுரேஷிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பி ஸ்டுடியோ என்ற நிறுவனத்திற்காக இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இருவரும் விசித்திரன் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். ஆனால் சிஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார், கடந்த 2015ம் ஆண்டே விசித்திரன் என்ற டைட்டீலை தான் கில்டு அமைப்பில் பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால் விசித்திரன் என்ற தலைப்பில் பி ஸ்டுடியோ தயாரிக்கும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை 14ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
இந்த வழக்கே விசித்திரமாய் இருக்கும் போலிருக்கே.