
கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர் காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. வாழும் மலையாள நடிகர்களில் மூத்தவர். தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம், ராப்பகல், கல்யாணராமன் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகும்போதே அப்பா, தாத்தா வேடங்களில் தான் அறிமுகமானார். தமிழில் பம்மல் கே.சம்ந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
98 வயதான உன்னி கிருஷ்ணனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்தது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 20) அவர் காலமானார்.
மலையாள சினிமாவின் மூத்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
நேத்துதான் இவரை பற்றி விடியோவை பார்த்தேன்...அர்த்தக்குள்ளவே...
இவர் ஒரு கம்யூனிச முன்னோடி .....
அவரு இளமையா இருந்தப்போ எப்படி இருந்ததுன்னு ஒரு படமும் கூட போடலாமே
தமிழ் நாளேடுகள் மெனக்கிட மாட்டார்கள் ......
இவர் மலையாளி என்று இப்போது தான் அறிகிறேன். ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு தமிழர்கள் கேரளாவில் பிரபலமாக உள்ளனரா? வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு வணக்கம் ஓம் சாந்தி