Advertisement

இது மாஸ்டர் பொங்கல் டா - கீர்த்தி சுரேஷ்

Share

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து 'மாஸ்டர்' படம் இன்று வெளியாகி உள்ளது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்பு வெளியாகும் பெரிய படம் 'மாஸ்டர்'.

அதனால், படத்திற்கு இன்று அதிகாலை 4 மணி காட்சிகள் பல ஊர்களில் நடைபெற்றது. சென்னையில் ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நாயகி மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தனர்.

விஜய் ஜோடியாக 'பைரவா, சர்க்கார்' ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் அதிகாலை காட்சியில் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்தார்.

“ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது, எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்க முடியாது. இதைவிட சிறந்தது என்ன இருக்க முடியும். இது மாஸ்டர் நெருப்பு, இது மாஸ்டர் பொங்கல் டா” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    ஹா ஹா.. மாஸ்டர் பொங்கல் ஊசிப்போச்சுண்ணு மக்களுக்கு தெரிஞ்சு போச்சு அம்முனி..

  • Elango - Sivagangai,இந்தியா

    விஜய் ரசிகர்கள் தான் தேட்டர்கு வருவாங்க அவுங்க சரி இல்லைனாலும் நல்லா தான் சொல்லுவாங்க... ஆக மொத்தம் விஜய்க்கு 50 கோடி கிடைத்து விடும்... அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வார்.... நாம் யோசிக்கவும்

  • Guna Gkrv - singapore,சிங்கப்பூர்

    படம் குப்பை சும்மா உடான்ஸ் விடாத தியேட்டரில் படத்தை உட்கார்ந்து பாக்க முடியான்னு Vijay ரசிகர் சொல்லிட்டு போகிறார் நீ ஐயோ முடியல

  • baygonspray - Aryan,ஈரான்

    momo முகம் இவருக்கு .

  • Elango - Sivagangai,இந்தியா

    நயன்தாராவை உங்களால் மட்டுமே ஓரங்கட்ட முடியும் உங்கள் வளர்ச்சிக்கு நிறைய தடைகள் வருகிறது கதையை கவனமாக தேர்வு செய்யுங்கள்....வாழ்த்துக்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement