Advertisement

இயக்குனர் ஈரோடு சவுந்தர் காலமானார்

Share

இயக்குனரும், வசனகர்த்தாவுமான ஈரோடு சவுந்தர்(62) உடல்நலக் குறைவால் காலமானார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்தவர் ஈரோடு சவுந்தர். சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

சிம்மராசி, முதல் சீதனம் போன்ற படங்களை இயக்கி உள்ளார். நாட்டாமை படத்தில் 'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு' என்ற வசனத்தில் வரும் கேரக்டராக மனோரமாவின் கணவர் வேடத்தில் நடித்திருந்தார். கடைசியாக தனது பேரன் கபிலேஷை நாயகனாக வைத்து 'உள்ளேன் அய்யா' என்ற படத்தை இயக்கினார்.

சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சவுந்தருக்கு நேற்று இரவு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் இன்றி இன்று(டிச., 5) மறைந்தார். சவுந்தருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்ரி என்ற மகள்களும் உள்ளனர். சவுந்தரின் இறுதிச்சடங்கு ஞாயிறு அன்று அவரது சொந்த ஊரான ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டம்பாளையத்தில் நடக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Sanjeeva - ,

    Naattami real HERO

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    aalnda irangalgal .

  • raj - ,

    RIP

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement