பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கர்ணன் படத்தைத் தொடர்ந்து விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு மாரி செல்வராஜ் புதிய படமொன்றை இயக்க இருக்கிறார். அதனை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஞ்சித் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் அந்தப் புதிய படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்ய வர்மா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்கிறார். இப்படத்தில் துருவ்விற்கு வில்லனாக அவரது அப்பாவும், நடிகருமான விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்க இருக்கிறது.
மாரி செல்வராஜ் படமும் அதே சமயத்தில் தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. எனவே ஒரே சமயத்தில் இந்த இரண்டு படங்களும் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் படத்தில் துருவ்?
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!