வருடத்திற்கு ஒரு படமாவது தனது தாய்மொழியான மலையாளத்தில் நடித்துவிட வேண்டும் என உறுதி எடுத்துள்ள நயன்தாரா, கடந்த வருடம் நிவின்பாலியுடன் இணைந்து லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட் ஆனது. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் நிழல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் அப்பு என்.பட்டாத்திரி என்பவர் இயக்கி வருகிறார். இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. கடந்த அக்-19ல் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை சுமார் 45 நாட்களிலேயே நடத்தி முடித்துள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!