கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் வெளியாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த படம் 'கேஜிஎஃப் - சாப்டர் 1'. இந்தப்படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இதையடுத்து இவர் தெலுங்கில் முன்னணி நடிகரான பிரபாஸை வைத்து 'சலார்' என்கிற படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
சலார் என்றால் என்ன அர்த்தம் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் இயக்குனர் பிரஷாந்த் நீல், ரசிகர்களின் சந்தேகத்தை போக்கும் விதமாக சலார் என்றால், “ஒரு அரசனின் வலது கரம் போன்றவன்.. சேனாதிபதி என்று சொல்லாம்” என கூறியுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!