Advertisement

ரசிகர்கள் வரவு இல்லை : தொடர் தடுமாற்றத்தில் தியேட்டர்கள்

Share

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதம் 10ம் தேதி திறக்கப்பட்டன. பின்னர் நவம்பர் 14 அன்று தீபாவளியை முன்னிட்டு சில புதிய படங்கள் வெளியாகின. ஆனால், தீபாவளி தினத்தன்றும், மறுநாள் விடுமுறை நாளான ஞாயிறு அன்றும் மட்டுமே மக்கள் ஓரளவிற்குத் தியேட்டர்களுக்கு வந்தனர்.

அதன்பின் அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகளைக் கூட நிரப்ப முடியாமல் தியேட்டர்காரர்கள் தடுமாறி வருகின்றனர். கடந்த வாரம் சில புதிய படங்களும், நேற்று சில புதிய படங்களும் வெளியாகின. ஆனால், தீபாவளிக்கு வெளியான 'பிஸ்கோத், இரண்டாம் குத்து' ஆகிய படங்கள் மட்டுமே கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது என்கிறார்கள். மற்ற படங்களின் வசூல் 10 லட்சத்தைக் கூடத் தொடவில்லையாம்.

ஆன்லைன் இணையதளங்களில் சென்று பார்த்தால் நான்கைந்து டிக்கெட்டுகள் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. கன்யாகுமரி முதல் சென்னை வரை பகல் பொழுதிலும் நல்ல மழை பெய்கிறது. அதன் காரணமாகவும் மக்கள் தியேட்டர்களுக்குப் போகவில்லை.

கொரோனா பயம் காரணமாக தியேட்டர்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவுடன் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது. மக்களைத் தியேட்டர்களுக்கு வரவழைக்க விஜய் நடித்த 'மாஸ்டர்' போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால்தான் நடக்கும் என்ற நிலையில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அது மட்டும் போதாது, மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் தான் அவர்களுக்கு அடுத்தடுத்து படங்களைப் பார்க்க முன்வருவார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.

தனுஷ் நடித்துள்ள 'ஜெகமே தந்திரம்', விஷால் நடித்துள்ள 'சக்ரா', கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்', உள்ளிட்ட படங்களும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆனால் தான் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் அடுத்தடுத்து புதிய படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். இதையெல்லாம் மனதில் வைத்து தயாரிப்பாளர்கள் சங்கமும், தியேட்டர்காரர்களும் முடிவெடுக்க வேண்டும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ரசிகர்கள் வரவு இல்லை. கொரோனாவை பரப்ப வழியில்லாமல் தியேட்டர்கள் திண்டாட்டம்.

 • நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு -

  எத்தனை மக்களின் வயித்தெரிச்சல் , அநியாய டிக்கட் விலை, அநியாய திண்பண்டங்கள் விலை, வாகன நிறுத்த கட்டணம் என்னைப் போன்ற நடுத்தர குடும்பம் திரையறங்கு வந்து போக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ரூபாய், திண் பண்டம் 500 ரூபாய், போக்குவரத்து வரத்து செலவு எல்லாம் சேர்த்து 1750 ரூபாய் எப்படி தியேட்டர் வந்து படம் பார்க்க மனம் வரும், இது நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நல்ல பாடம்.

 • ANTONYRAJ - MADURAI,இந்தியா

  எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து மதுரையில் சுமார் எழுபது எண்பது சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஆனால் தற்போது மிஞ்சி மிஞ்சி போனால் குறைஞ்சது ஒரு முப்பது or முப்பத்தைந்து சினிமா தியேட்டர்களே உள்ளன.கிட்டதட்ட நாற்பது தியேட்டர்களில் பாதி திருமண மண்டபகங்களாகவும் மீதி கோடவுன்களாகவும் காலத்திற்கு ஏற்ப மாறி வருவாயை ஈட்டிக் கொண்டிருக்கின்றன.மற்ற ஊர் தியேட்டர் காரர்களுக்கும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் இப்போதும் ஒண்ணும் கெட்டுப் போகலை இது கார்த்திகை மாதம்,அடுத்து மார்கழி மாதத்தில் தியேட்டரை கல்யாண மண்டபமாக புனரமைத்து தை மாத முகூர்த்த நாளில் இருந்து மண்டபத்தை வாடகைக்கு விட்டு வருடம் முழுவதும் நிரந்தரமாக நேர்மையாக (சினிமா டிக்கெட்டில் அதிக காசு புடுங்குவது,பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் அதிகப் பணம் வசூலிப்பது,இடைவேளையில் சாதாரண பாப்கானுக்கு மக்களின் வயித்தெரிச்சலை கண்டுக்காமல் பணம் பிடுங்குவது)வருமானம் ஈட்டலாம்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஒழியட்டும் சினிமா மோஹம்; விடியட்டும் தமிழகத்தில் நல்லகாலம் .

 • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

  ஒரு காலத்தில் ஊரில் உள்ள தகர ஷெட் கல், அரிசி அரவை மில்களை மூடி சினிமா கொட்டகைகளாக்கி ஊரை கெடுத்தார்கள் அந்த பாவம் தற்போது சினிமா அரங்குகள் மூடப்படும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது .சினிமா கொட்டகை மூடுவதால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை ....ஒழியட்டும் வரலாறு திரும்புகிறது ...நடிகர்களின் கோட்டம் அடங்கி வழிக்கு வரும்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஊருக்கு ஒரு திரையரங்கம் இருந்தால் போதும்... மற்ற திரையரங்கங்களிருக்கும் இடங்களை அங்காடிகள், நூலகங்கள், ஜிம், குடியிருப்புகள் என உருப்படியான தேவைகளுக்கு உபயோகிக்கலாம்..

 • Siva - Aruvankadu,இந்தியா

  ஆயிரக்கணக்கில் மக்கள் மூச்சு விடும் இடம் எப்படி சுகாதாரமாக இருக்கும். ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சினிமா தியேட்டர் உகந்த இடம் அல்ல. அதை தவிர்க்க வேண்டும்

 • Siva - Aruvankadu,இந்தியா

  தியேட்டர்களை மூடிடுங்கப்பா. உங்கள் குலம் குடும்பம் தழைக்கும். மக்கள் அதாவது இளைய தலைமுறை வாழட்டும். படிக்கட்டும் உழைக்கட்டும் உயரட்டும். சினிமா வேண்டாம். அது தேசத்தின் சாபம்..

 • sankaseshan - mumbai,இந்தியா

  சினிமா ஒழிந்தால் நடிகர்களின் கொட்டமடங்கும் கள்ளப்பணம் ஒழியும் தமிழ்நாடு உயரும் .

 • Nallavan Kettavan - Madurai,இந்தியா

  next 6 month to one year, convert the theatre to wedding hall..atleast theatre will get some business

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

  கூத்தாடிகளுக்கு ஆப்பு அடித்த கொரோனாவுக்கு ரொம்ப நன்றி இனி கூத்தாடிங்க எல்லாம் அரசியல் பண்ண கெளம்பிடுவானுங்க

 • swa -

  ஆடின ஆட்டம் என்னஅணைத்து திரையரங்கம் இழுத்து மூட வேண்டும்

 • Ram - Panavai,இந்தியா

  ஒன்லி டாஸ்மாக்

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  கொஞ்ச நஞ்சமாவா ஆடினீங்க....ஒரு காஞ்சி போன பப்ஸ் 260 ரூபாய்...

 • mupaco - Madurai,இந்தியா

  கட்டணங்கள் குறைக்கப்படின் குடும்பமாக வர ஆசைப்படுவர். வெள்ளிவிழா, நூறுநாள் படங்கள் திரையரங்கில் ஓடியதுண்டு. விநியோகஸ்தர் கேட்பதை எல்லாம் தியேட்டர்காரர் கொடுத்தால் இப்படித்தான். தயாரிப்பாளர் கேட்பதையெல்லாம் விநியோக. கொடுக்கக்கூடாது. நடிகர் கேட்பதை எல்லாம் தயாரிப்பாளர் படம் ஓடுவதை பொறுத்து நிர்ணயிக்கவேண்டும். முடியுமா?

 • Prakash - Chennai,இந்தியா

  நல்ல மாற்றம். அப்படியே சினிமா பார்த்தல் என்ற பழக்கத்தை இளைய தலைமுறை மறந்து பிற பயனுள்ள வழிகளில் பொழுதை கழிக்க பழகவேண்டும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement