Advertisement

பிரபுதேவா டாக்டரை மறுமணம் செய்தது உறுதியானது

Share

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் கமர்ஷியல் இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் பிரபுதேவா. தனது அப்பா நடன இயக்குனர் சுந்தரத்திடம் உதவி மாஸ்டராகப் பணிபுரிந்து 90களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் விளங்கியவர். பின்னர் இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் படங்களை இயக்கியுள்ளார்.

பிரபுதேவாவுக்கும் அவரது நடனக் குழுவில் இருந்த ரமலத் என்பவருக்கும் பல வருடங்களுக்கு முன்பே ரகசியத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். எந்த ஊரில் இருந்தாலும் தனது இரண்டு மகன்களையும் சந்திக்க அடிக்கடி சென்னை வருவார் பிரபுதேவா.

சில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் தீவிர காதல் இருந்தது. அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கும் மாறினார் நயன். மேலும் தனது கையில் 'பிரபு' என்றும் டாட்டூ குத்திக் கொண்டார். ஆனால், இருவரும் திடீரெனப் பிரிந்துவிட்டார்கள்.

கடந்த சில வருடங்களாக சில நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டார் பிரபுதேவா. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி தற்போது டாக்டர் ஹிமானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபுதேவா மும்பையில் இருந்த போது அவருக்கு சிகிச்சை அளிக்க வந்தவர்தான் பிஸியோதெரபிஸ்ட்டான ஹிமானி. சிகிச்சை அளிக்க வந்தவர் காதலில் சிக்கிக் கொண்டார்.

இருவரது திருமணமும் கடந்த மே மாதத்தில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. அந்த செய்தி தற்போது தான் வெளியில் வந்துள்ளது. இதை பிரபுதேவாவின் அண்ணனும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரமும் உறுதி செய்துள்ளார். பிரபுதேவாவின் மறுமணம் அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    வெட்கம் கேட்ட பிரபலங்கள்

  • சங்கீ சக்ரீ சனந்தகீ - hosur,இந்தியா

    இதெல்லாம் என்ன ஜூஜூபி,

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    கூந்தல் இருக்கறவுங்க கொண்டையும் போட்டுக்கலாம் பின்னல் போட்டுக்கலாம் ...

  • SaiBaba - Chennai,இந்தியா

    ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது, கூடாது. அந்த அநாகரீக செயலுக்கு இந்தியர்கள் மிகவும் பிரசித்தம். பிரபு தேவா திருமணமே செய்யக்கூடாது என்பது சட்டமா? பொருந்தாத திருமணங்கள் செய்துவைத்து அதிலேயே கண்டிப்பாக வாழ்ந்து சாக வேண்டும் என்று எழுதப்படாத சட்டங்கள் உள்ள வரையில் நம் நாட்டில் யாருமே நிம்மதியாக வாழ முடியாது.

    • Muruga Vel - Mumbai,இந்தியா

      தன்னுடன் நடனமாடிய ரமலத்தை காதல் திருமணம் செய்து ...மூணு குழந்தைகளுக்கு பிறகு பொருந்தா திருமணம் ஆகிவிட்டதா

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    சரி, அடுத்த திருமணம் எப்போ? அதை சொல்லுங்க முதலில்.

    • Manian - Chennai,ஈரான்

      பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் டயம் கொடுங்க இந்த பூவிலே இன்னும் கொஞ்சம் தேன் இருக்குதே ~

    • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

      கல்யாணம் தானே பண்ணிருக்கார் . கூட்டிட்டு ஓடலியே? பின்னே ஏன் உங்களுக்கு காண்டு ? சக்தி இருக்கிறவன் பண்ணிக்கறான் .

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement