Advertisement

அதிரடி சலுகைகளை அறிவிக்கும் தியேட்டர்கள்

Share

கொரானோ தொற்றால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தமிழ்நாட்டில் கடந்த வாரம் திறக்கப்பட்டன. தீபாவளி முதல் புதிய படங்களுடன் பெரும்பாலான தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அனுமதி அளித்த 50 சதவீத இருக்கைகள் பல தியேட்டர்களில் நிரம்பியதால் தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால், வார நாட்களில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மிக மிகக் குறைந்த அளவே மக்கள் தியேட்டர்களுக்கு வருகை புரிந்தனர். தீபாவளிக்கு வெளியான பிஸ்கோத், இரண்டாம் குத்து படங்கள் ஓரளவிற்கு வசூல் செய்து தப்பித்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அது நடக்கவில்லை.

இதன் காரணமாக சென்னையில் உள்ள சில தியேட்டர்கள் அதிரடி சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். ஒரு படத்திற்கு டிக்கெட் வாங்கினால் இன்னொரு படம் இலவசம் என்று சென்னையில் உள்ள காசி டாக்கீஸ், ஜிகே சினிமாஸ் அறிவித்துள்ளார்கள். சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தி வரும் எஜிஎஸ் சினிமாஸ் ஏற்கெனவே டிக்கெட் விலையைக் குறைத்திருந்தார்கள். தற்போது உணவுப் பொருட்கள், குளிர்பானங்களுக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளார்கள்.

இப்படி சலுகைகள் அறிவித்த பின்னரும் மக்கள் வருவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இப்போது தெரிகிறதா தியேட்டர்கள் எப்படி கொள்ளையடிக்கிறார்கள். எல்லா விலையையும் ஏற்றி விட்டு இப்போது 50% offer என்று கூறுகிறார்கள். யாரும் தியேட்டருக்கு போகக்கூடாது. அவர்களே விலையை குறைத்து விடுவார்கள்

  • Indhuindian - Chennai,இந்தியா

    தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் மற்றும் கொரோனா இலவசம். முந்துங்கள் இது குறுகிய கால சலுகை. எப்பிடியும் இன்னும் கொஞ்ச நாள்ல இந்த தீயேட்டர்லாம் காணாம போயிடும்.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    டிக்கெட் இலவசமாக கொடுத்தாலும் மக்கள் வர மாட்டார்கள்.

  • Nisha Rathi - madurai,இந்தியா

    மக்கள் தியேட்டருக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் நமது புண்ணியவான் தமிழ் ராக்கர்ஸ் இருக்கும் போது நாம் ஏன் தியேட்டருக்கு செல்ல வேண்டும்

  • giri - madurai

    Get one tiicket and get one corona freeeee

  • Bhaskaran - Chennai,இந்தியா

    விலையை ஏற்றிவிட்டு குறைப்பதுபோல் பாவனை செய்வாங்க .குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கும் தண்ணீருக்கும் அனுமதிமறுத்தவங்களாச்சே இந்த புண்ணியவங்க . எல்லோரும் வீட்டில் சுகமாய் சினிமா பார்த்துமகிழவேண்டும் .தியேட்டருக்கு எதுக்கு போகணும்

  • Rajen - Chennai,இந்தியா

    Better don't go now.

  • sing -

    Adina attam enna

  • ILAIYARAJA -

    people dont waste your money......

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement