LOGIN
Advertisement

“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு

Share

800 என்ற பெயரில் தயாராகும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வருகின்றனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி. எதிர்ப்புகள், -எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி (அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் 'தமிழ்மக்கள் செல்வந்தர் ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம்! (காலங்காத்தால...) நடப்பது நன்மையே. so நன்மையே நடக்கும் என நம்புவோம்!” என இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியும், பார்த்திபனும் துக்ளக் தர்பார் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • LAX - Trichy,இந்தியா

  யப்பா.. முடியல.. கருத்துன்ற பேர்ல.., பார்த்திபன் அடுத்த கமலஹாசன்..

 • veera pandian - chennai,இந்தியா

  அச்சுறுத்தல் மூலமாக ரசனையில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்திகளின் சர்வாதிகாரத்தை வெற்றி பெற வைப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. மத்திய அரசுக்கும் அச்சுறுத்தல் ஆகும். தமிழ்நாட்டில் சாமான்யர்களின் பொதுநலனுக்காக ஆளுநர் ஆட்சிக்கான அவசியத்தையும் உணர்த்துவதாகும்.

 • ILAIYARAJA -

  "Shame on SRH" Twitter trending aga wait panitu irukan..... oru cinema kaaranum vaaya thiraka matenguraane.... Ithukuthan Coronavuku naan thanks solrathu....

 • V.B.RAM - bangalore,இந்தியா

  சன் குழுமம் பற்றி மக்கள் , ரசிகர்கள் மட்டும் இல்ல , எந்த பத்திரிகையும், தொலைக்காட்சியும் கூட, ஏன் வாய் திறப்பதில்லை, .அவ்வளவு பயமா, தினகரன் அலுவலகம், எறிந்த நிகழிச்சி நினைவுக்கு வருகிறதா,

  • karutthu - nainital,இந்தியா

   சன் குழுமம் மட்டும் அல்ல தி மு க வைப்பற்றி விவாதம் செய்ய சில முன்னணி ஊடகங்கள் இவர்கள் எதிர் கட்சி யாக இருக்கும்போதே பயப்படுகின்றனர்

 • boycott goltis in Tamil cinema -

  how goltis are gathering to support him.. radika , parthiban, next ratharavi...

  • Radhakrishnan -

   Because hes also a ......

 • Subramanian - Mumbai ,இந்தியா

  ஏன் யாருமே சன் குழுமம் பற்று பேச மாட்டேன் என்கிறீர்கள். சினிமாவில் கூடாது என்றால் விளையாட்டிலும் கூடாது தான். இல்லை எல்லோருக்கும் சன் குழுமத்திடம் பயமா

  • selva - tiruvarur,இந்தியா

   சன் குழுமம் மட்டும் அல்ல சிங்கள அரசாங்கத்துக்கு துணை போன காங்கிரஸ், ராஜபக்ஷேயை போய்ப்பார்த்த திருமாவளவன் இவர்களையும் புறக்கணிக்க வேண்டும்

 • ILAIYARAJA -

  athu yenda SRH Pathi ethuvum pesa matenguringa... sports Vera cinema veraya

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement