LOGIN
Advertisement

'பிசாசு 2' இசை பணிகள் துவக்கம்

Share

ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்குகிறார் மிஷ்கின். பொதுவாக இவரது படங்களில் இசை தனித்து தெரியும். அந்தவகையில் இப்படத்தின் இசைக்கு வலிமை சேர்க்க கார்த்திக் ராஜா இணைந்துள்ளார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின் அதனை, மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் எனக்குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

மிஷ்கின் கூறியதாவது : பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்க முடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். தற்போது கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் மகிழ்ச்சி. அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக பூர்த்தி செய்ய பிசாசு 2 படத்தின் ஒவ்வொரு நொடியையும் வெகு கவனமுடன் செதுக்கி உருவாக்குகிறேன் என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement