LOGIN
Advertisement

தமன்னாவுக்கு 40-லிருந்து 4-ஆகக் குறைந்தது

Share

கொரானோ வைரஸ் சினிமா பிரபலங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல நடிகர்கள், நடிகைகள் கொரானோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர்.

மும்பை நடிகையான தமன்னா, ஐதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்த போது கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பினார்.

தமன்னா, உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். கொரானோ ஊரடங்கு சமயத்தில் பல வீடியோக்களைப் பதிவிட்டவர். நேற்றும் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அதில் கொரானோ பாதிப்பிற்குப் பிறகு அவர் செய்யும் உடற்பயிற்சிகளைப் பதிவிட்டிருந்தார்.

முன்பெல்லாம் 40 புஷ்-அப்ஸ் வரை எடுப்பாராம். ஆனால், தற்போது 4 மட்டுமே எடுக்க முடிகிறது என்று கூறியுள்ளார். கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வலிமை குறைந்து விடுகிறது என்றே பலரும் சொல்கிறார்கள். மீண்டும் பழைய நிலைக்கு வர நல்ல உடற்பயிற்சியும், சத்தான உணவும் அவசியம். தமன்னா அதைச் செய்து மீண்டும் 40 புஷ்-அப்ஸ் எடுக்க வாழ்த்துவோம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    இவர் எதுக்கு கவலை படணும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement