LOGIN
Advertisement

'புத்தம் புதுக் காலை' - காப்பி அடித்தாரா கார்த்திக் சுப்பராஜ் ?

Share

ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் நிறுவனம் நேற்று 'புத்தம் புதுக் காலை' என்ற ஒரிஜனல்ஸ்-ஐ வெளியிட்டது. சுதா கொங்கரா, கௌதம் மேனன், சுஹாசினி, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களின் தொகுப்பு தான் இந்த 'புத்தம் புதுக் காலை'.

இதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'மிராக்கிள்' என்ற குறும்படம் காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான அஜயன் பாலா அது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது,

நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமேசானில் புத்தம் புதுக்காலை படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார். என்ன என கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்காக இருந்தது. அதில் கடைசியாக வரும் மிராக்கிள் படம் அப்படியே நான் நடிக நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கொரானாவால் போஸ்ட் புரொடக்ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூ-ட்யூபில் வெளியானது என் சச்சின் கிரிக்கட் கிளப் குறும்படம்.

இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன். என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக்களம் பகல் அதில் இரவு. மத்தபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்காக தவறு செய்யப்போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும், இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் கிளைமாக்சாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது.

படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். பன்னிரண்டு வருடமாய் நன்கு பழகியவர். இதை சட்டபூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை .

ஒரு ஷார்ட்பிலிமின் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருவது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை. சரி ஒரு ஷார்ட்பிலிமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா? எத்தனை சிறுகதைகள் கொட்டிக்கிடக்கிறது, எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை் பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை.

சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது.

என்னுடைய குறும்படத்தின் லிங்க் : https://youtu.be/jBisF5iSxnM

என்று பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் தான் 'கதை காப்பி' விவகாரம் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்று எதிர்பார்த்தால், இப்போது ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் 'கதை காப்பி' சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது. என்ன பதில் சொல்லப் போகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    இவர் எங்கேந்து சுட்டாரோ ..

  • Mithun - Bengaluru,ஓமன்

    இவன் காப்பியடிப்பதில் வல்லவன். இவனுக்கு CAA என்றால் என்ன என்பதை புரியவைக்கவும்.

  • thonipuramVijay - Chennai,இந்தியா

    கார்த்திக் சுப்புராஜ் இனி காபி திக் காபி ராஜ் என்று வெறுப்போடு அழைக்கப்படுவார்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement