LOGIN
Advertisement

பாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா

Share

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்ப கலாட்டாக்கள். செண்டிமென்டுகள் நிறைந்திருப்பதால் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு சீரியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதில் சுஜிதா, ஹேமா ராஜ்குமார், வெங்கட், சித்ரா, குமரன், தங்கராஜன், ஸ்டாலின், விக்ரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். குடும்ப தொடராக இருந்த போதும் கதிர்-முல்லை காதல் எபிசோட் இளமை துடிப்போடு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது முல்லை கேரக்டரில் நடித்த ஹேமாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் தொடரில் இருந்து விலகுகிறார். என்றாலும் அவருக்கு பதில் இன்னொரு நடிகையை நடிக்க வைக்காமல் அவர் கேரக்டரை கதைக்குள்ளேயே சைலண்ட் ஆக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

குடும்பத்தின் கடைசி மகனான கண்ணன் கேரக்டருக்கு ஜோடி இல்லை. இதனால் அவருக்கு ஜோடியாக அதாவது கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு ஜோடியாக சத்யசாய் கிருஷ்ணாவை உள்ளே கொண்டு வருகிறார்கள். கதிர்-முல்லை ஜோடியின் இடத்தை கண்ணன்-சத்யசாய் ஜோடி நிரப்பும் என்று நம்புகிறார்கள். சத்யசாய் கிருஷ்ணா அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற சீரியல்களில் நடித்தவர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • LAX - Trichy,இந்தியா

    'முல்லை கேரக்டரில் நடிப்பது சித்ரா..' 'முல்லை & கதிர் தான் சித்ரா & குமரன்' நீங்க குறிப்பிடும் நடிகை 'மீனா' கேரக்டராக இருக்கும்.. குழப்புறீங்களேப்பா..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement