LOGIN
Advertisement

உலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா

Share

பிரபல டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம் பெற்றுள்ளார். மிகப்பெரிய ஆளுமைகளான சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், அமிதாப்பசன் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் இடம்பிடித்திருப்பது பாலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

100 பேரில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை வழிமுறையை கண்டுபிடித்த லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ரவீந்திர குப்தா, சமூக சேவகர் பிலிகிஸ் தாதி ஆகியோருடன் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இடம் பெற்றுள்ளார்.

கமர்ஷியல் ஹீரோ இல்லை. ஆனால் நல்ல கதைகளை தேர்வு செய்து, அதில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்தாதூன் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து ஆயுஷ்மான் குரானா கூறியிருப்பதாவது: எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரத்துக்குத் தலை வணங்குகிறேன். ஒரு கலைஞனாகத் திரைப்படங்களின் மூலம் இந்தச் சமூகத்தில் நேர்மறையான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவே பங்காற்றியிருக்கிறேன். எனது நம்பிக்கைக்கும், எனது பயணத்துக்கும் இந்தத் தருணம் மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. எனது கதைத் தேர்வுகளின் மூலமாக என் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குப் பங்காற்ற முடிந்திருக்கிறது என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement