LOGIN
Advertisement

நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது வழக்கு பதிவு

Share

பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப். தமிழில் நயன்தாராவுக்கு வில்லனாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார். இவர் மீது பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதில் அனுராக்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாயல் கோஷ் மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் அனுராக் காஷ்யப் மீது நேரில் சென்று பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக அனுராக் காஷ்யப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அனுராக் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனுராக் விரையில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. என்றாலும் அனுராக் மும்பை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement