LOGIN
Advertisement

இளைஞர்கள் அடாவடி ; போலீஸுக்கு தகவல் கொடுத்த விஷ்ணு விஷால்

Share

படப்பிடிப்புகள் துவங்க அரசிடம் இருந்து அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஆந்திராவில் தனது படம் ஒன்றுக்காக முகாமிட்டுள்ளார்.. அந்தவகையில் ஐதராபாத்தில் அவர் காரில் பயணித்தபோது, இரவு நேரத்தில் சாலையில், தனக்கு முன்னே சென்ற ஒரு காரில், இரண்டு இளைஞர்கள் காருக்கு வெளியே ஆளுக்கொரு ஜன்னல் வழியாக பாதி உடல் வெளியே தெரியுமாறு நின்றபடி அடாவடி செய்து கொண்டே பயணித்தனர். இதை தனது மொபைலில் பதிவு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், இந்த வீடியோவை ஐதராபாத் போலீஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், “இதோ நம் நாட்டின் படித்த இளைஞர்களை பாருங்கள். பொதுவாக இதுபோன்ற வீடியோக்களை நான் பதிவிடுவதில்லை. ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் உயிருடன் மட்டுமல்லாது, சாகசங்கள் என்கிற பெயரில் தங்களது செயல்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தொந்தரவு தருகின்றனர். விழிப்புணர்வுக்காவும் மற்றவர்கள் இதுபோல செய்யக்கூடாது என்பதற்காகவும் தான் இதை பதிவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளதுடன், “இது என்னவென்று கொஞ்சம் பாருங்கள்..” என அதில் ஐதராபாத் போலீஸாரையும் டேக் செய்துள்ளார்..

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • B.KESAVAN - chennai,இந்தியா

    நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு, வாழ்த்துக்கள்.

  • LAX - Trichy,இந்தியா

    நீங்கள்லாமும்பணம் சம்பாதிக்கறதுக்காக சினிமா../நடப்பு ங்கற பேர்ல இந்த மாதிரி சமுதாய சீர்கேடுதானே செய்யறீங்க.. அதையும் யோசிச்சு பாருங்களேன்..

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement