LOGIN
Advertisement

மேஜர் ரவியின் காதல் படத்திற்காக இணையும் சுரேஷ்கோபி-ஆஷா சரத்

Share

மலையாள திரையுலகில் தொடர்ந்து ராணுவ பின்னணி கொண்ட படங்களையே இயக்கி வருபவர் மேஜர் ரவி. பெரும்பாலும் இவரது பல படங்களிலும் மோகன்லால் தான் ஹீரோவாக நடித்து வந்தார். இந்தநிலையில் தனது பாதையில் இருந்து முற்றிலும் மாறி, காதல் படம் ஒன்றை இயக்க உள்ளார் மேஜர் ரவி.. பள்ளிப்பருவத்தில் காதலுடன் பிரிந்த இருவர், 34 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்வதும், அதன்பின்னர் அவர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யங்களும் தான் படத்தின் கதையாம்.

இந்த காதல் ஜோடியாக சுரேஷ் கோபியும் ஆஷா சரத்தும் நடிக்க இருக்கிறார்கள். த்ரிஷ்யம் படம் மூலம் தனது அதிரடி நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஆஷா சரத், இதற்குமுன் மேஜர் ரவி டைரக்சனில் கர்மயோதா மற்றும் '1971 பியான்ட் தி பார்டர்ஸ்' என இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் மேஜர் ரவி படங்களில் நடித்திருந்தாலும், சுரேஷ்கோபி அவரது படத்தில் நடிப்பது இதுதான் முதன்முறை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement