LOGIN
Advertisement

காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Share

தமிழ் சினிமாவின் ஹாட் ஆன காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தான் இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே தீவிரமான காதலில் இருக்கும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு டூர் பறந்து விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து அடுத்தவர்களை பொறாமைப்பட வைக்கும்.

ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானத்தில் கொச்சின் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஜோடி. தற்போது தங்கள் குடும்பத்தினருடன் கோவாவில் ஓய்வில் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் அம்மா, நயன்தாரா அம்மா ஆகியோரும் அவர்களுடன்தான் இருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இன்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். எப்படி காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடாமல் இருப்பார். வழக்கம் போல வெளியிட்டுவிட்டார். விக்னேஷ் சிவனுக்கு பல சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நிச்சயம் இன்று கொண்டாட்டம் இருக்கும்.

இந்நிலையில், குட் டைம் ஸ்டார்ட் நவ் என்ற வாசகத்துடன், டி - -சர்ட் அணிந்து, நயன்தாராவை அரவணைத்தபடி நிற்கும் விக்னேஷ் சிவனின் படம், சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இப்படத்தை, நயன்தாரா டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, எப்போதுமே நல்ல நேரம் தான் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கோலிவுட் வட்டாரத்தில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Ram - Thanjavur,இந்தியா

    அப்ப இதுநாள் வரை என்ன டயம்ம்

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

    பணம் பண்ணும் வேலை , பணம் பண்ணும் மாயம் , பணம் பாதாளம் வரை பாயும் , பணம் அனைத்தையும் மறந்து போக செய்யும் . பணம் பத்தும் செய்யும் . காசே தான் கடவுளப்பா கட வுளுக்கும் இது தெரியுமப்பா . பணம் கடந்த காலங்களை மறக்க செய்யும் . பணம் மனிதனுக்கு ஒரு மருத்துவ முறை

  • சுதா, பட்டுக்கோட்டை -

    ஒருத்தரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் திரும்ப திரும்ப காமிக்க வேணும். உலக சினிமா பேசுங்கள் முடிந்தால் தெரிந்தால் . இவர்களை போன்றவர்ககளை சமுதாயதின் முன் நிறுத்தி எதார்த்த வாழ்க்கையை மறக்க வைக்க வேண்டாம். நமது பாரம்பரியம் இதையெல்லாம் கடந்து நிற்பது, இளையோர் க்கு வழி காட்டுங்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement