LOGIN
Advertisement

டுவிட்டரில் சாதனை படைத்த விஜய் செல்பி

Share

விஜய் கடந்த ஆண்டு நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்புக்கு சென்றபோது அங்கு அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். விஜய் அங்கு படப்பிடிப்பில் இருந்த போதுதான் வருமான வரித் துறையினர் அவரை அங்கிருந்து அழைத்து வந்து வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க அதிகளவு ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் கூடினார்கள். திடீரென்று ஒரு பஸ் மேல் ஏறி நின்று ரசிகர்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

தற்போது அந்த புகைப்படம் தான் டுவிட்டரில் அதிக அளவில் ரீடுவீட் செய்யப்பட்ட ஒரு நடிகரின் பதிவாக மாறி இருக்கிறது. தற்போது வரை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரீ டுவீட், 3 லட்சத்து 55 ஆயிரத்து 800 லைக் ஆகியவை அந்த டுவீட்டுக்கு கிடைத்துள்ளது.

சென்ற வருடம் விஜய் நடித்த பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் 2019 சினிமா துறையில் அதிகம் ரீடுவீட் செய்யப்பட்ட பதிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement