Advertisement

தியேட்டர்கள் மூடல் : எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

Share

கொரோனா தொற்று பரவாமல் இருக்க மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஒவ்வொரு மாநிலமாக சினிமா தியேட்டர்களை மூட சம்பந்தப்பட்ட அரசுகள் உத்தரவிட்டன. சினிமா தியேட்டர்களை மூடி ஆறு மாதங்களாகிவிட்டது.

மீண்டும் சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து அரசு இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்றே சொல்லி வருகிறார்கள்.

இந்த ஆறு மாதங்களாக சினிமா தியேட்டர்களை மூடியதால் சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தாங்கள் திணறி வருவதாக சினிமா தியேட்டர்கள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சினிமா தியேட்டர்கள் மூடியதில் மட்டும் அவ்வளவு நஷ்டம் என்றாலும். அதே சமயம் படங்களை வெளியிட முடியாத காரணத்தினால் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்த நஷ்டத்தைச் சரிக்கட்டத் தியேட்டர்களைத் திறந்தாலும் மக்கள் வந்தால்தான் மேலும் நஷ்டம் ஆகாமல் தடுக்க முடியும். 200 பேர் அமர வேண்டிய தியேட்டரில் 20 பேர் மட்டுமே வந்தால் அந்த நஷ்டம் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது.

மற்ற தொழில்கள் ஓரளவிற்கு தங்கள் நஷ்டத்தை சரிக்கட்டி நடைபெற ஆரம்பித்துவிட்டது. ஆனால், சினிமா தொழில் மட்டும் மீண்டும் முழுமையாக ஆரம்பமானாலும் நஷ்டத்தைத் தவிர்க்க மேலும் ஒரு வருட காலம் ஆகலாம் என்கிறார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • S.Ganesan - Hosur,இந்தியா

  இதனால் நாட்டுக்கு ஒன்றும் கேடு இல்லை. சினிமா பார்ப்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனித நேரம் வீணாகிறது. சினிமாவினால் நாடகம், தெருக்கூத்து , பல நாட்டுப்புற கலைகள் அழிந்து போய் விட்டன. பலர் வாழ்வை இழந்து போயினர். அதற்கு சினிமாவே மூல காரணம். மேலும் சினிமாக்காரர்கள் பல காலமாக கோடி கோடியாக சம்பாதித்து விட்டனர். இப்போது இந்த இழப்பு ஒன்றும் பெரிதல்ல. மேலும் இவர்களால் நிரந்தர வருமானம் பெறுவது யாரும் இல்லை. இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் சினிமா தொழிலில் உள்ள அடிமட்ட தொழிலாளிகளுக்கு ஒரு உபயோகமும் கிடையாது. இவர்கள் சம்பாதிப்பது எல்லாம் மக்களின் உழைப்பே. அதை இவர்கள் ஒரு சிறு கூட்டமாக உறிஞ்சி விடுகிறார்கள். இப்போது சினிமா இல்லாததால் மக்களின் பணம் மக்களுக்கே பயன்படுகிறது. சினிமாவினால் நாடு பொருளாதாரமோ அல்லது கட்டமைப்போ மேம்படுவதில்லை. தேவையற்ற பிரச்னைகள்தாம் ஏராளம். இவர்கள் இல்லாதிருப்பதே நல்லது.

 • thonipuramVijay - Chennai,இந்தியா

  திரையரங்குகள் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது இது இன்னும் உரிமையாளர்களுக்கு ஏன் புரியவில்லை ??? இனி நீங்கள் திறந்தாலும் யாரும் வரப்போவது இல்லை. இதுக்குதான் பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழியை சொல்லி வைத்தார்கள். Ticket விலை, parking charges, தண்ணீர் பாட்டில் கூட எடுத்து செல்லக்கூடாது என்ற கேடுகெட்ட கெடுபிடி, பாப்கார்ன் cooldring பல மடங்கு விலை இப்படி பல கொள்ளை. ஒரு குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்தால் 2000 ரூபாய் கொள்ளை போகிறது. அதற்கு வீட்டில் டிவி யில் பார்ப்பது மிக எளிது , பன மிச்சம். உரிமையாளர்கள் கொள்ளை அடித்து தின்றது போதும், இனி தலையில் துண்டை போட்டு திரையரங்கை விற்றுவிட்டு வேறு பிழைப்பை பார்க்கவும்.

 • Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சினிமாக்காரங்க ஏற்கெனவே மக்களை ஏமாற்றி அளவுக்கு அதிகமாக சம்பாதித்துள்ளீர்கள் தானே.

 • Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா

  தியேட்டர் திறந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தை விட அதிகம் பாமர மக்களுக்குத்தான் இழப்பு அதிகம், நடிகர்களுக்கு போஸ்டர் adippatju, பாலாபிஷேகம் செய்வது தியேட்டர்களில் டிக்கெட் கொள்ளை வாகன டோக்கன் கொள்ளை கண்டேன் கொள்ளை என பலவகைகளில் இழப்பு. தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த கருமாந்திரங்கள் எல்லாம் இல்லை.

 • Prakash - Chennai,இந்தியா

  Do you know how much is saved by head of family.

 • Swamy - pondicherry,இந்தியா

  மக்களின் பணம், கூத்தாடிகளுக்கு போயி சேரவில்லை .

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஆனாலும் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார தொகை அனைத்தும் கட்டவேண்டும் . இதே நிலைதான் எல்லோருக்கும் இருக்கிறது, அதிகாரிகள் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் காட்டும்படி கேட்டுக்கொண்டு அதே நேரத்தில் கடிதமும் கொடுத்து கையொப்பமும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள், ஒரு நாள் செய்தி பழைய வரி என்கிறார்கள், ஆனால் அதிகாரிகள் எங்களுக்கு அப்படி ஒன்றும் வரவில்லை என்கிறார்கள், மொத்தத்தில் யாருக்கும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று விழிக்கும் நிலையில் அந்த அந்த துறைகளுக்கு வரவேண்டிய தொகைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது, பாராட்டுக்கள், வந்தே மாதரம்

 • Tamilnesan - Muscat,ஓமன்

  திரை அரங்குகள் அனைத்தும் முற்றிலும் இடித்து தள்ளிவிட்டு அவைகள் அரசாங்கத்தால் இணைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டும். இழப்பீடு எதுவும் வழங்கப்பட கூடாது. ஆனால், இதை த்ராவிஷ கட்சிகள் செய்யாது. இவர்கள் மக்களுக்கு இடைஞ்சல் செய்து தான் பழக்கம். தேசிய கட்சிகள் தான் செய்யும்.

 • ilaiyaraja muthu -

  என்னது மக்களுக்கு 9000 கோடி லாபமா...... ஆறு மாசத்துக்கு இவ்வளவு லாபம்னா வருடக்கணக்கில் எவ்வளவோ......

 • Hm Join - Chennai,இந்தியா

  ரூபாய் 9000 கோடி மக்களுக்கு மிச்சமுனு தலைப்பை மாத்தி போடணும்...

 • Girija - Chennai,இந்தியா

  திரைப்படங்களினால் சமூகத்திற்கு எவ்வளவு நஷ்டம் என்று தெறியுமா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement