
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கன்னி மாடம்

கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற செப்படம்பார் 11ந் தேதி முதல் 13ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் திரையிட கன்னிமாடம் படம் தேர்வாகி உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கி இருந்தார். ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு என்ற புதுமுகங்களுடன் இயக்குனர் யார் கண்ணனின் மகள் சாயாதேவி ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். ஆடுகளம் முருகதாஸ், மைம்கோபி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஹரி சாய் இசை அமைத்திருந்தார். இனியன் ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆணவக் கொலை பற்றிய பேசிய இந்த படத்திற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்திருந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!