LOGIN
Advertisement

பிளாஷ்பேக்: தமிழ் மலையாளத்தில் சாதனை படைத்த வங்க இசை அமைப்பாளர்

Share

இன்றைய இளம் தலைமுறையினருக்கு சலீல் சவுத்ரியை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் அவர் பாடல்களை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வங்கத்து இசை அமைப்பாளரான சலீல் சவுத்ரி வங்க படங்களை போன்ற சாயல் கொண்ட மலையாள படங்களுக்கு இசை அமைக்க வந்தார். தேசிய விருது பெற்ற செம்மீன் படத்திற்கு இசை அமைத்தார். அந்த படத்தில் வரும் கடலினக்கற போனோரே பாடல், தமிழ் ரசிகர்களின் மனதில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக பதிந்து நிற்கிறது. மலையாள மீனவர்களின் தேசிய கீதமாக இருக்கிறது.

20 வருடங்கள் வங்கத்தில் கோலோச்சிய பின்பு 1965ல் சலீல் சவுத்ரி கேரள மண்ணுக்கு வந்தார். முதல் படம் செம்மீன். . ஏழு ராத்ரிகள், ஸ்வப்னம், நீலப்பொன்மான், நெல்லு, ராகம். ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி, துலாவர்ஷம் தொடங்கி தும்போலி, கடப்புரம் உள்பட 23 படங்களில் 106 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

சலீல் சவுத்ரியை தமிழுக்கு கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. அவர் நெல்லு என்ற மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்தபோது அந்த படத்திற்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. அவரின் ஒளிப்பதிவு திறமை கண்டு வியந்த சலீல் நீ எப்போது படம் இயக்கினாலும் நான்தான் இசை அமைப்பாளர் என்றார். அதற்கு ஏற்ப பாலுமகேந்திராவின் முதல் படமான கோகிலா, அழியாத கோலங்கள் படங்களுக்கு இசை அமைத்தார். பூ வண்ணம் போல மின்னும்... பாடல் ஒன்றே போதும் சலீம் சவுத்ரியின் புகழுக்கு.

அனைத்து இசை கருவிகளும் இசைக்கத் தெரிந்தவர், மெட்டுக்கு பாட்டு எழுதும் முறையை அறிமுகப்படுத்தியவர். காட்சியின் தன்மைக்கேற்ப பின்னணி இசைக்கும் முறையை கொண்டு வந்தவர் என பல பெருமைகள் சலீல் சவுத்ரிக்கு உண்டு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • விஜய் -

    ... பாலுமகேந்திராவோட எல்லா படத்துக்கும் இளையராஜாதான் இசை..

    • rangan - chennai

      இல்லை. மூடு பனி தான் முதல் படம்

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    'தூரத்து இடி முழக்கம்' என்கிற படத்துக்கும் இவர்தான் இசை அமைத்தார். தவிர சிறைக்கு சென்று திரும்பியவுடன் எம்.ஆர்.ராதா நடித்த நான்தான் சுட்டேன் படத்துக்கும் இவர்தான் இசை அமைப்பாளர். அனால் அந்த படம் வெளி வரவில்லை

  • Columbus -

    His music for the Hindi Dilip Kumar Vyjayantimala starred Madhumati is an all time classic.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement