Advertisement

வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு

Share

தமிழ் சினிமாவில் நிலவும் நெபோடிசம் குறித்து கோலிவுட் மாபியா என்ற பெயரில் நடிகை மீரா மிதுன் சமூகவலைதளங்களில் திரைப்பிரபலங்களை விமர்சித்து வந்தார். இதற்கு அந்த ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். ஒருக்கட்டத்தில் எல்லை மீறிய மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவி, குடும்பத்தினர் குறித்தும் தரக்குறைவாக பேசினார். இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் திரையுலகில் உள்ள எவரும் இதுப்பற்றி வாய்திறக்கவில்லை. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூட அமைதி காத்து வந்தனர். அதேசமயம் நடிகர்களின் ரசிகர்கள் இன்னும் ஆவசேமாகி, மீராவை சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு தீட்டி தீர்த்தனர். இதனால் சமூகவலைதளமே கிட்டத்தட்ட சாக்கடை போன்று மாறியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கமோ இல்ல பிற சங்கங்கங்களோ எந்த ஒரு அறிக்கையோ, கண்டனம் தெரிவிக்காத நிலையில் புதிதாக உருவாகி உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆபத்தான கலாச்சாரம்
அதில் அவர் கூறியிருப்பதாவது : சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை... ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.. கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்? திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !!

வரம்பு மீறும் மீராவை கண்டிக்கிறேன்
அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்... பசியைப் போக்கும்... அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.

திரையுலகினர் ஏன் கண்டிக்கவில்லை
நம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்... நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை. தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது? யாரோ ஒருவனின் அவமானம் தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்... அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??

நறுக்கப்பட வேண்டிய சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்... ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை ... எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே.. இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ரசிகர்களை கட்டுப்படுத்துங்க உச்ச நட்சத்திரங்களே
உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்... ??!நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட...

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன. ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே... என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  ஏதோ பாரதிராஜா மட்டும் வரம்பு மீறியதில்லை போல பேசுகிறார்.. வரம்பு மீறிய பாரதிராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

 • LAX - Trichy,இந்தியா

  சின்மயி, விஜயலக்ஷ்மி விஷயங்களில் அமைதியாக, இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு, இப்ப சோதிகாவுக்கும், சோசப் விசய் வூட்டுக்காரம்மாவுக்குமாக, ஓவரா.. பொங்கி, மீரா மிதுன் னை இளித்தவாயாக நினைத்துக்கொண்டு, லெங்க்த்தா அறிக்கை விடும் புதிய சங்கத் தலைவருக்கு, வாசகர்கள் கருத்து பகுதியில் இதுவரை குவிந்திருக்கும் கண்டனங்கள்.. அதைவிட, லெங்க்த்.. இப்போ.. 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்' னு யார் இவருக்காக வக்காலத்து வாங்கப் போறாங்க னு பாப்போம்..

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   இந்த ராசா இருக்கரே பாரதி ராசா , அவர் ஒரு காரிய வாதி , காரிய கிறுக்கன் என்பார்கள் அந்த வகை அதி மேதாவி. அதிமுக அமைச்சர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை

 • siriyaar - avinashi,இந்தியா

  இவர் அறிமுகபடுத்திய ஹிரோயின்களில் ஒன்றை கூட சும்மா விட்டுறுக்க மாட்டார்,

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மீரா மிதுனின் அடுத்த அட்டாக் அன்னன் தான்

 • vbs manian - hyderabad,இந்தியா

  சினிமா குடுமத்தை பற்றி குறை சொன்னால் வேதனை அறிக்கை விடுகிறார். தமிழ் சமுதாயத்தில் நடக்கும் மற்ற அவலங்களை பற்றி மௌனம். இந்து மத கலாச்சாரம் தெய்வங்கள் நம்பிக்கைகள் .ஒரு குறிப்பிட்ட இனத்தை பற்றி வசை பாடுதல் இவையெல்லாம் கண்ணில் படவில்லையோ நிஜ சமுதாய அக்கறை இருந்தால் அநியாயங்கள் எல்லாவற்றையும் கண்டிக்க வேண்டும்.

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  சிவ மைந்தன் குடும்பத்தோட இந்து மதத்தை பேசும்போது இனிச்சதொ? லயோலா கல்லூரி ஆர்ட் கேலரி மறக்க முடியுமா? சோசப்பு அப்பர் சொன்னாரு தெரியுமா? இனிமேல், காவி வெட்டி தான் கட்டணுமா னு....ஏன், பிடிக்கலினா சும்மா கூட திரியவேண்டியது தானே...அய்யா, நீயெல்லாம், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்......

 • Rajan - Alloliya,இந்தியா

  ...போவியா

 • Nagamani Nagarajan - Madurai,இந்தியா

  பாரதி ராஜா மிக அருமையான அறிவுரை. இந்த நடிகர்களும் அவர்களது பட்டாளங்களும் இதற்கும் குதர்க்கமாக விமர்சிக்காமல் நல்லதாக எடுத்துக்கொள்ளவேண்டும் .

 • samvijayv - Chennai,இந்தியா

  ..கருத்து சுதந்திரம் என்பது உங்களுக்கு மட்டுமா?., மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது. ஜோதிகா பேசும்போது எங்கிருந்திர்கள்..?, வைரமுத்து பேசும்போதும், அமைதி இருந்திர்கள் ஏன் வயதான காலத்தில் சற்று ஒய்வு எடுங்கள்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இவர் இதான் இவரது சங்கத்திற்கு ஆதரவு தேடுகிறார். விஜயலக்ஷ்மி, சின்மயி பாதிக்கப்பட்ட போது வாய் மூடி மௌனமாக இருந்தவர். இப்போது சூர்யா விஜய் க்கு சாமரம் வீசுகிறார். ஜோதிகா கோவிலை பற்றி பேசும்போது ஒரு மூத்த கலைஞராக எடுத்து சொல்லியிருக்கவேண்டும். ஆனால் இப்பொது பொங்கி எழுகிறார்.

 • konanki - Chennai,இந்தியா

  வைரமுத்து க்கு மட்டுமே கருத்து சுதந்திரமா? மீரா மிதுனுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா?

 • konanki - Chennai,இந்தியா

  நிறுத்தலன்னா என்ன செய்வார்?

  • Anand - chennai,இந்தியா

   இவர் நிறுத்திக்கொள்வார்.

 • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

  கொஞ்சம் பொறுங்க. தேவை என நினைக்கும் பொழுது கலிங்கபட்டியார் கறுப்பு கோட்டுடன் களம் இறங்குவார்.

 • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

  கந்த சஷ்டியை மற்றும் திமுகவின் மீது மக்களுக்குள்ள அதிருப்தி மரிடோஸ் வீட்டில் ராசிக்கு மக்கள் அதிருப்தி இதை எல்லாம் சரி செய்ய மீரா மிதுனயும் பாரதி ராசாவயும் பயன் படுத்துகிறார்கள் . இவங்களே வைப்பார்களாம் அப்புறம் இவர்களே எடுப்பங்களாம் . மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .

 • Ambika. K - bangalore,இந்தியா

  ஐயா பாரதி ஒன் கருத்து சுதந்திரம் எங்கே போச்சு . மீரா மிதுன் சொல்வதில் உள்ள உண்மையை , அது கசந்தாலு m , adhai திருத்திக் க பாரு. இனி ஒருத்தன் ஒண்ணயோ ஒன் ஒன்றயணா படத்தைப் பார்க்க போவதில்லை.

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  இவர் மணிவண்ணனை பற்றி எழுதியதை பார்த்து அவர் இறந்திருப்பார்... ரஜினியை, கமலை, இளையராஜாவை, மற்றும் பலரை எவ்வளவுமுறை இப்படி பேசியிருப்பார்...ஜாதி துவேஷத்தை எப்படி எல்லாம் தூண்டியுள்ளார்....இவரை பார்த்துதான் எல்லோரும் இப்படி பேசுகிறார்கள்.

 • Prakash - Chennai,இந்தியா

  ஆமாம். இல்லையென்றால் அவர்கள் இனி சினிமாவில் நடிக்க மாட்டார்கள்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  மறைந்த இயக்குனர் (அவர் மட்டுமே உண்மையில் 'இயக்குனர்')பாலச்சந்தரை உனது 'கூட்டம்' நோட்டீஸ் ஒட்டி அசிங்க படுத்த முயற்சிக்கையில் ஜாதி வெறி பிடிச்சு அலஞ்சியே ?அப்போ எங்கே போச்சு உன்னோடே நீதி உணர்வு?ஜோதிகாவும் விஜய் பொண்டாட்டியும் தான் உனக்கு இப்போ பெரிசா தெரியுறாங்க ,சின்மயி விஷயத்திலே, சும்மா தானே இருந்தே? கிழட்டு வயசிலே சினிமாலே அரசியல் பண்ணாதே .ரெண்டு இட்லி காலைலே சாப்பிட்டிட்டு நடை பயிற்சி பண்ணவும் -மனசு தெளியலாம்

  • Aarkay - Pondy,இந்தியா

   தாகத்திற்கு???

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தனக்கென்றால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா? நல்லா இருக்கு பாரதிராசா சட்டம். வயதானால் புத்தி பிசகும்போல.

 • Ram - Thanjavur,இந்தியா

  புதிய தயாரிப்பாளர் சங்கத்துக்கு .. கொஞ்சம் வெயிட்டான மெம்பெர்ஸ் தேவை...( எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

 • venkata - chennai ,இந்தியா

  பணப் பசி உங்களை துரத்திய போது இறை மந்திரங்களை அசிங்கப்படுத்தி நீலப்படம் டக்கரு பேபி வெளியிட்ட உளுத்துப் போன நீங்கள் புத்திசொல்லக்கூடாது. அசிங்க காட்சிகளை வரிசைப் படுத்திய.நீங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் நெஞ்சில் காமம் விதைத்த நீங்கள் புத்தி சொல்ல வந்து விட்டீர்கள் . காசு உங்களுக்கு மட்டும்தான் தேவையோ?

 • பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா

  கந்தனை நிந்தனை செய்த போது வராத கோபம் சோதிகாவை பற்றி சொன்னவுடன் வந்துவிட்டது , தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்

 • konanki - Chennai,இந்தியா

  சின்மயி வைரமுத்து வால் தாக்கப்படும் போது பிடில் வாசித்த பாரதி ராஜா இப்ப பாயராரே

 • konanki - Chennai,இந்தியா

  விஜயலட்சுமி கூறுவது பாரதி ராஜா காதில் விழாது

 • konanki - Chennai,இந்தியா

  விஜய் சூர்யா ஜோதிகா மற்றவர்கள் மீது ஆதாரம் உண்மை இல்லாமல் பொய் பிரச்சாரம் செய்த போது இனிச்சுதோ. உங்களுக்கு வந்தா ரத்தம். மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சாஸா

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  மிதுன் சொல்வது ஏன் பாரதிராஜாவுக்கு மட்டும் உரைக்கிறது. உத்தமர்கள் அமைதி காக்கின்றனர். பாரதி மட்டும் குதிக்கிறார். மீரா மிதுனை மிரட்டுகிறாரா. கவலைப்படாதீர்கள் மீரா. உண்மையை உரக்கச் சொல்லுங்கள். எவனுக்கும் பயப்படாதீர்கள்

 • Girija - Chennai,இந்தியா

  தொண்ணுறு வயது முதியவர் வயது மூப்பால் தூக்கத்தியிலேயே இறந்துவிட்டார். அது தெரியாமல் அவரை இவனது ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர், அவர்களும் பரிசோதிவிட்டு இருந்துவிட்டார் என்று கூறி சர்டிபிகேட் கொடுக்க கேட்ட பணம் பத்தாயிரம் தான் , அதிகம் இல்லை ஜென்டில்மேன்.

 • புகழ் -

  அடேயப்பா, சைமனோட சேந்து ஹிந்துக்களை எவ்வளவு மோசமாக பேசியுள்ளீர்? சைமனால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப்பட்ட பெண்ணுக்காக ஐயா மூச்சு கூட விடவில்லை. இளையராஜா தான் ஒரு ஹிந்து என்ற போது, நீ எங்கேயிருந்து வந்தேன்னு நெனச்சுப்பாருன்னு கூவுனவர் நம்ம ஐயா. இன்னும் எவ்வளவோ பேசிறுக்காறு. இன்று ஜோசப்புக்காக கதறிக்கிட்டு வந்துட்டாரு. ஒரு பெண் இவ்வளவு பேசுகிறாள் என்றால், அவளுக்கு ஏதோ ஒரு பாதிப்பு இருக்கலாம். சினிமாக்கரனும் யோக்கியன் கிடையாதில்லையா? கோடிகள் புழங்கும் இடத்தில் ஒழுக்கம் ஓடிவிடும்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  தன் மகன் மீது ஏதாவது உளரி விடுவார் என்று பயமோ..

 • jysen - Madurai,இந்தியா

  He made his handsome son who would not even get the job of a waiter in a Tasmac bar a hero in cinema. poking its nose unnecessarily.

  • anonymous - ,

   yes correct

  • Aarkay - Pondy,இந்தியா

   He's a customer there. Why would he do a waiter's job?

 • s vinayak - chennai,இந்தியா

  இப்படி பேசுவதெல்லாம் பாலசந்தர் மற்றும் உங்களை போன்றவர்களின் திரைப்படங்களைப் பார்த்த தோஷம் தான்.

 • Ramanathan - Leeds,யுனைடெட் கிங்டம்

  நல்ல பதிவு. எந்த காரணமாக இருந்தாலும் தரம் தாழ்ந்து பேசாதீர்கள் நண்பர்களே. விமர்சிப்பது உங்கள் உரிமையாயினும் நாகரிகமாக நடந்து கொள்வது சால சிறந்தது.

  • செந்தில் - ,

   அதை அவருக்கே சொல்லவும்.

  • Aarkay - Pondy,இந்தியா

   நாகரீகமென்றால், சொரிமுத்துவைப் போலவா?

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சூர்யா விஜய் போன்றோர் தனிப்பட்ட காரணங்களுக்காக பிடிக்காத அரசியல்வாதிகள்மேல் துப்புவது எந்த வகையில் நியாயம் என்று இவர் சொல்லட்டும்.

 • palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ

  சார். விஜ்யலக்ஷ்மி அப்படினு ஒரு நடிகை. தற்கொலை வரை போய்விட்டார்கள். ஏன் நீங்கள் எல்லாம் எங்கேய போய் விடீர்கள். ஏன் வாய் திறக்க வில்லை என்று வரை கதறி கொண்டு உள்ள அந்த நடிகை ...பெண்ணாக தெரிய வில்லையா ...கமல் ..ரஜினி நாட்டிற்கு நல்லத்து செய்வது இருக்கட்டும் ... எந்த நடிகைக்கு ஏன் ...யாரும் இல்லை திரை உலகில் இருந்து ....

  • யார்மனிதன் - Toronto,கனடா

   BJP கைக்கூலி பொய் சொல்லுற

  • Aarkay - Pondy,இந்தியா

   பிஜேபி ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல ஹவாலாக்களின் கைக்கூலியாய் இருப்பதை விட, அண்டை நாட்டுக்காக, நம் சொந்த நாட்டை விட்டுக்கொடுப்பதை விட இது ஒன்றும் கேவலமில்லை. இருபது சதவிகிதத்தினரை மைனாரிட்டி என்று கொஞ்சிக்குலாவும் கூத்தெல்லாம், இனியும் நடக்காது. இந்துக்களின் எதிரிகளுக்கு தக்க பாடம் நாங்கள் புகட்டுவோம் இனி.

 • ilaiyaraja muthu -

  ..... விஜய் மற்றும் சூர்யா வின் வளர்ச்சியில் விஞ்ஞானபூர்வமான கீழ் தரமான வேலைகள் செஞ்சானு ஊருக்கே தெரியும்...

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  நாட்டாமை சொல்லிட்டார்

 • Girija - Chennai,இந்தியா

  அங்கிள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் மகா கெட்டிக்காரர். எம் ஜி ஆரையே துதி பாடி கவுத்தவர். கலியுக வள்ளல்கள் விஜய் சூர்யா என்று போற்றி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார். இவர் வண்டவாளங்கள் ஆஸ்பத்திரி விஷயத்தில் வெளியே வந்ததே , அம்மா காப்பாற்றினார் . பிரசாத் ஸ்டுடியோ வில் இருந்து கிளம்ப ஞானி வாங்கியது எவ்வளவு ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement