Advertisement

பதுங்கிப் பாய்ந்த வனிதா: ரூ.2.5 கோடி கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்

Share

கடந்த சில மாதங்களாக கொரோனா பிரச்சினைக்கு ஈடாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது வனிதா விஜயகுமார் திருமணம் தான். திருமணம் என்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கை முடிவு என்பதையும் தாண்டி சிலர் அதில் கருத்து சொல்ல விவகாரம் பூதாகரமானது.

ஒரு வீடியோவில் வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வார்த்தைப் போர் ஏற்பட, இருவருமே ஒருமையில் ஒருவரை ஒருவர் திட்டி சண்டைப் போட்டுக் கொண்டனர்.

இந்த சண்டையைத் தொடர்ந்து தன்னையும், தன் கணவரையும் தரக்குறைவாக பேசியதற்காக வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

அதற்கு பதிலடி தரும் விதமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வனிதா. இதில், தனக்கு இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு வனிதா வலியுறுத்தியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    இது 1.5 கோடி அது 2.5 கோடி வழக்கு என்ன மான நஷ்ட??இது மானம் இருப்பவர்களுக்குத்தானே இவர்களுக்கு எதற்கு அநீதிமன்றம் இதை உடனே தள்ளுபடி செய்யவேண்டும்

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    இருவருமே ஒருமையில் ஒருவரை ஒருவர் திட்டி சண்டைப் போட்டுக் கொண்டன... SUPER நல்லாவே கூத்து விடுறீர்கள்..

  • M.RAGHU RAMAN - chennai,இந்தியா

    இவுங்க ரெண்டு பேருமே யாரு?

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    இப்போ இருக்கிற இருப்புக்கு இவுங்க மான நஷ்ட ஈடு கேட்டு தான் சம்பாத்தியம் பண்ண முடியும் ..

  • Aarkay - Pondy,இந்தியா

    ரொம்பப்ப்பா முக்கியம்

  • Girija - Chennai,இந்தியா

    அல்வா கஸ்தூரி போலீஸ் கூப்பிட்டதும் ஆப் ஆகிவிட்டார். லட்சுமி ராமகிருஷ்ணனை உசுப்பிவிட்டு கேஸ் போட வைத்து இப்போ நூடுல்ஸ். அவங்க அப்பாவே வாலை சுருட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கார் என்றால் தேறிய வேண்டாம்? அந்த எலிசபெத்திடம் பேட்டி என்ற பெயரில் அபத்த கேள்விகேட்டு அதற்க்கு அவர் ஆபாசமாக பேசினார். சட்டக்கல்லூரிக்கு போயிருக்கிறேன் என்றும் சொல்லும் இவர் படித்து முடித்தாரா? பார் கவுன்சிலில் ரிஜிஸ்டர் செய்துள்ளாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement