LOGIN
Advertisement

கொரோனாவிற்கு தயாரிப்பாளர் சுவாமிநாதன் மரணம்

Share

கொரோனா நோய் தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் மரணம் அடைந்தார்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ''அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன்'' உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர் வி.சுவாமிநாதன். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில் சுவாமிநாதனுக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஆக.,10) அவரது உயிர் பிரிந்தது. சுவாமிநாதனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுவாமிநாதனின் மகன் அஸ்வின், 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, 'கும்கி' படம் மூலம் பிரபலமாகி அதன்பின் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் ஆனது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • LAX - Trichy,இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்கள்..

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    பாவம் அன்னாரது ஆன்ம சாந்தி அடைyaட்டும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement