Advertisement

மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு!

Share

மதியழகன் தயாரிக்க, யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில், கதை நாயகியாக ஹன்சிகா நடிக்கும், மஹா படத்தில், முக்கிய பாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு படத்தின், 'போஸ்டர்' ஒன்றை, நேற்று வெளியிட்டது. இது, ரசிகர்களிடையே வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.ஹன்சிகா குறித்து, இயக்குனர் ஜமீல் கூறுகையில், ''சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் என்றால், அது ஹன்சிகா தான். அதேபோல், நேரத்தையும் மதிக்கக்கூடியவர் என்றால், அது அவர் தான்,'' எனக் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement