Advertisement

சர்வதேச விழாவில் 'ஆல்பா அடிமை'

Share

ஓர் இரவில் நடக்கும், 'க்ரைம் த்ரில்லர்' படம், ஆல்பா அடிமை. ஜினோவி எழுதி, இயக்கிஉள்ளார். இசையமைப்பாளராக, சத்யஜித் -ஜென் மார்ட்டின், படத் தொகுப்பாளராக அஸ்வின் அறிமுகமாகின்றனர். ஈஸ்வர், வினோத் வர்மா, விஜய் ஆனந்த் மற்றும் சின்னத்திரை நடிகர் அருண் ஆகியோர் நடித்துஉள்ளனர்.படம் குறித்து, தயாரிப்பாளர் ரஜ்வி கூறியதாவது:இது, முற்றிலும், புதியவர்களை வைத்து எடுக்கப்பட்ட படம். மூன்று பாகங்கள் உடையது.ஆல்பா அடிமை முதல் பாகம்; இரண்டாம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஆக., 7ம் தேதி, 'இண்டஸ் வேலி' சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், முதல் தென்னிந்திய படம் இது.இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement