Advertisement

மறக்க முடியுமா? - வேலைக்காரன்

Share

படம் : வேலைக்காரன்
வெளியான ஆண்டு : 1987
இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்
நடிகர்கள் : ரஜினி, சரத்பாபு, அமலா, கே.ஆர்.விஜயா
தயாரிப்பு : கவிதாலயா

அமிதாப் பச்சன் நடித்த, நமக் அலால் என்ற ஹிந்தி திரைப்படத்தின், ரீமேக் தான், வேலைக்காரன். ரஜினியின், 100வது படமான, ஸ்ரீராகவேந்திரா படம் கொடுத்த நஷ்டத்தை ஈடுகட்ட, இப்படத்தில் அவர் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தாத்தாவிடம் வளரும் ரகுபதி, வேலைக்காக சென்னைக்கு வருகிறார். ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான, ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில், ரகுபதிக்கு வேலை கிடைக்கிறது. அங்கு சொத்துக்காக, மாமாவும், அவரது மகனும் சேர்ந்து, ராஜ்குமாரை கொல்ல திட்டமிடுகின்றனர். இந்த கொலை முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், கொலைப்பழி, ராஜ்குமாரின் தாய் மீதே விழுகிறது. இந்த சூழ்நிலையில், ராஜ்குமாரின் தாய் தான், தன்னை பெற்றெடுத்தவள் என்ற உண்மை, ரகுபதிக்கு தெரிய வருகிறது. இதை தொடர்ந்து, சதிகாரர்களுக்கு எதிராக போராடி, ராஜ்குமாரையும், தன் தாயையும் காப்பாற்றுகிறான், ரகுபதி. இது தான், படத்தின் கதை.

கிரைம் கதையாக இருந்தாலும், அதில் நகைச்சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஐ யாம் ரகுபதி, சன் ஆப் கஜபதி... என்று ஆரம்பித்து, மூச்சு விடாமல், ரஜினி பேசும் நீண்ட ஆங்கில வசனம், ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. ரகுபதியாக, ரஜினி; அவரின் தாத்தாவாக, வி.கே.ராமசாமி; ராஜ்குமாராக, சரத்பாபு; அவரின் வளர்ப்பு தாயாக, கே.ஆர்.விஜயா ஆகியோர் தான், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

இளையராஜாவின் இசையில், அனைத்து பாடல்களையும், மு.மேத்தா எழுதியிருந்தார். எனக்குத் தா உன் உயிரை, மாமனுக்கு மயிலாப்பூர் தான், பெத்து எடுத்தவ தான், வா வா வா கண்ணா, வேலை இல்லாதவன், தோட்டத்திலே பாத்திகட்டி... பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    ரஜினியின் குணத்திற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு..தன்னால் நஷ்டப்பட்ட கவிதலாயாவுக்கு தானே முன் சென்று முன்பணம் வாங்காமல் நடித்து கொடுத்த படம்..பாலச்சந்தர் பெரும்பாலும் மசாலா படங்களை தனது நிறுவனத்தில் தயாரிப்பதில்லை...முழுக்க முழுக்க ரஜினியை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படம்... தயாரிப்பாளரின் நம்பிக்கையை வீணாக்காத சூப்பர்ஸ்டார்..

  • Escobar -

    forgot to mention Mr.Senthil. who can forget his comedy in this movie

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement