Advertisement

மறக்க முடியுமா? - விக்ரம்

Share
மறக்க முடியுமா? -  விக்ரம் Entertainment பொழுதுபோக்கு

படம் : விக்ரம்
வெளியான ஆண்டு : 1986
இயக்கம் : ராஜசேகர்
நடிகர்கள் : கமல், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ்

தமிழ் சினிமா வரலாற்றில், 1 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் படம் விக்ரம்! வார இதழ் ஒன்றில், எழுத்தாளர் சுஜாதா எழுதிய தொடர்கதை, திரைப்படமாக, கமலால் உருவாக்கப்பட்டது. இதனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது.

'அக்னிபுத்திரன்' என்ற ஏவுகணையைக் கடத்தி விடும் கும்பலில் இருந்து, ஹீரோ எப்படி நாட்டைக் காக்கிறார் என்ற, 'ஜேம்ஸ்பாண்ட்' கதை தான், விக்ரம். இப்படத்திற்காக, 'சலாமியா' என்ற கற்பனை நாடு உதயமானது. ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு, சலாமியா என, பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள, எலி கோவிலில் எடுக்கப்பட்ட காட்சிகள், ரசிகர்களை ஆச்சரியப்பட செய்தன; எவ்வளவு எலிகள்!

சலாமியா மன்னராக, ஹிந்தி நடிகர் அம்ஜத்கான் நடித்திருப்பார். வில்லன் சுகிர்தராஜா கதாபாத்திரத்தில், சத்யராஜ், நக்கலும், நையாண்டியுமாக அதகளம் செய்திருப்பார். மொழி பெயர்ப்பாளராக வரும் ஜனகராஜ், ராஜாவின், 16வது மனைவியாக இருக்கும் மனோரமா ஆகியோர், நகைச்சுவைக்கு காரணமாக இருந்தனர்.

சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும், ஹாலிவுட் பாணியில் அமைந்தன. இப்படத்திற்கு பின், சண்டை பயிற்சியாளர், விக்ரம் தர்மா என்றழைக்கப்பட்டார். படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்துச் சென்றதால், இயக்குனர் ராஜசேகர், வேறு படத்தை இயக்க சென்றுவிட்டார். அதனால், மீதி படத்தை சந்தானபாரதி இயக்கியதாக கூறப்படுகிறது.

இளையராஜாவின் இசையில், 'விக்ரம், வனிதாமணி, சிப்பிக்குள் ஒரு முத்து, என் ஜோடி மஞ்சக்குருவி, மீண்டும் மீண்டும் வா...' போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.

விக்ரம் படத்தை இப்போது, 'ரீமேக்' செய்யலாம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement