Load Image
dinamalar telegram
Advertisement

மறக்க முடியுமா? - மவுன ராகம்

மறக்க முடியுமா? -  மவுன ராகம் Entertainment பொழுதுபோக்கு

படம்: மவுன ராகம்
வெளியான ஆண்டு : 1986
நடிகர்கள் : மோகன், கார்த்திக், ரேவதி, வி.கே.ராமசாமி
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : சுஜாதா பிலிம்ஸ்

இயக்குனர் மணிரத்னம் அறிமுகமான, பல்லவி அனு பல்லவி என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பின்போது, சிறுகதை ஒன்று, அவர் மனதில் தோன்றியது. அதற்கு, திவ்யா என, பெயரிட்டார். அதை படமாக்கும் முயற்சி, கைகூடவில்லை. பல தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், தன் சகோதரர், ஜி.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இப்படத்தை துவக்கினார்; மவுன ராகம் என பெயரிட்டார்!

ஜி.வி.பிலிம்ஸ் தயாரித்த முதல் படமும் இது தான். பி.சி.ஸ்ரீராமின் கண்வண்ணத்தில், படத்தின் ஒளிப்பதிவு பெரும் பாராட்டைப் பெற்றது. பெற்றோரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப, சந்திரகுமாரை மணந்து கொள்ளும் திவ்யா, மறைந்த தன் காதலன் கார்த்திக்கின் நினைவுகளை மறக்க முடியாது தவிக்கிறார். தன் கணவரிடமிருந்து, விவாகரத்து கேட்கிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், சந்திரகுமாரும், திவ்யாவும், ஒரு ஆண்டு, ஒன்றாக வாழ்கின்றனர். இக்காலகட்டத்தில், இருவருக்கும் இடையே, காதல் மலர்கிறது. இது, மவுன ராகம் படத்தின், அழகான கதை.

மிக குறைந்த வசனங்கள், அழகிய இயக்கம், மயக்கும் இசை என, மனதிற்கு நெருக்கமான படத்தை உருவாக்கினார், மணிரத்னம். மிஸ்டர் சந்திரமவுலி... என துறுதுறுவென இருக்கும் கார்த்திக்; விவாகரத்து கேட்டாள்... வாங்கி கொடுக்கவா என, ஆழமான அமைதியாய் மோகன்; கம்பளி பூச்சி ஊர்வது போல இருக்கு... என தவிக்கும், ரேவதி... இவர்கள் மூவரின் பாத்திர படைப்பும், ரசனைமிக்கதாக இருந்தது.

இப்படம், தேசிய திரைப்பட விழாவில், சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது. நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு... என, என்றும் இனிய பாடல்களை, இளையராஜா வழங்கினார். தமிழர்களின் நெஞ்சங்களில் ஒலிக்கும், மவுன ராகம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement