Advertisement

இயக்குனரின் வேண்டுகோள்!

Share

தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.எஸ்.தங்கசாமி வெளியிட்ட அறிக்கை:

திரையுலகினர் சந்திக்கும் சிரமங்களும், சூழ்நிலைகளும், ஒரு தொடர் நாவலில் எழும், பல கதைகளாக எழுதப்பட வேண்டியவை.சினிமா என்பது மற்ற வேலைகளை போல் அல்ல. படப்பிடிப்பு இருந்தால் தான் அனைத்துமே; இல்லையென்றால் ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு படமும் முடியும் போது,அத்துடன் அந்த படத்தில் வேலை செய்தவர்களுக்கும், வேலை முடிந்து விடும்.

வேலை தான் முடிந்து விடுகிறதே தவிர, செலவுகளும், அன்றாட பிரச்னைகளும் முடிந்து விடுமா என்ன! அது தலைக்கு மேல் வைக்கப்பட்ட கத்தி போல், ஒவ்வொரு சினிமா தொழிலாளர்களின் வாழ்விலும், தொடர்ந்தபடி தான் வரும்.மூன்று மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. பலருக்கு, ஏற்கனவே வரவேண்டிய தொகையும் வரவில்லை. என்ன செய்வர்?சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில், உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை, அவர்கள் உணர்வர் என்று நம்புகிறேன். வேண்டுகோளும் விடுக்கிறேன்.இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் செய்யும் குறைந்தபட்ச உதவிகள் கூட, பெரிய அளவில் அவர்களின் வாழ்வில் நிம்மதியை, அமைதியை ஏற்படுத்தக் கூடும்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement