Advertisement

பத்மநாப சுவாமி கோவில் பின்னணியில் வரலாற்று படம்

Share

பழசிராஜா, மாமாங்கம் பட வரிசையில் மலையாளத்தில் அடுத்ததாக திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் பத்மநாப சுவாமி கோவில் வரலாறை பின்னணியாக வைத்து 'தர்ம ராஜ்யா' என்கிற படம் உருவாக இருக்கிறது. தற்போது விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா என்கிற புராண படத்தை இயக்கிவரும் ஆர்.எஸ்.விமல் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.. இந்த தகவலை டைட்டில் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார் ஆர்.எஸ்.விமல்.

பெயரை குறிப்பிடாமல், அதேசமயம் இந்தப்படத்தில் கதாநாயகனாக மலையாள சூப்பர்ஸ்டார் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டிருப்பதால் மோகன்லால் தான் இதில் நடிப்பார் என்றே தெரிகிறது. அதேசமயம் அவர் தற்போது இயக்கிவரும் மஹாவீர் கர்ணா படத்தில் சுரேஷ்கோபியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதால் இவரைத்தான் சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டுள்ளாரோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஷுவல் புரொடக்சன் மூலம் லண்டனில் உருவாக இருக்கும் முதல் இந்திய திரைப்படம் இது என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். இந்தப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாராக இருக்கிறதாம்..

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement