dinamalar telegram
Advertisement

மறக்க முடியுமா? - சிந்து பைரவி

Share
மறக்க முடியுமா? - சிந்து பைரவி Entertainment பொழுதுபோக்கு

படம்: சிந்து பைரவி
வெளியான ஆண்டு : 1985
நடிகர்கள் : சிவகுமார், சுஹாசினி, சுலக்சனா, டில்லி கணேஷ்
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : ராஜம் பாலசந்தர்

சிந்து வைரவி படத்தில் தான், இளையராஜாவும், பாலசந்தரும் முதல் முறையாக இணைந்தனர். கர்நாடக இசை தொடர்பான படம் என்பதால், இளையராஜா, காலத்தால் அழியாத பாடல்களை தந்திருந்தார். 'கலைவாணியே, மகாகணபதிம், மோகம் எனும் மாய பேயை, பூமாலை வாங்கி, தண்ணி தொட்டி...' போன்ற பாடல்களை, கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார்.

'நான் ஒரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன்...' - போன்ற பாடல்கள் வழியாக, பாடகி சித்ரா அறிமுகமானார். முதல் படத்திலேயே, சிறந்த பாடகிக்கான, தேசிய விருது பெற்றார். சிறந்த இசையமைப்பாளர் விருது, இளையராஜாவுக்கு தான்! 'மகாகணபதிம்...' பாடலில், மிருதங்கம் பயன்படுத்தாமல் புதுமை செய்திருந்தார், இளையராஜா. இப்படத்திற்கு பின், கர்நாடக இசை கலைஞர்கள், தமிழில் பாடுவதற்கு முக்கித்துவம் கொடுக்க துவங்கினராம்.

இசைக்கலைஞர், ஜே.கே.பி.,யாக சிவகுமார், அவரின் மனைவியாக சுலக்சனா, காதலியாக சுஹாசினி. இவர்கள் வாழ்வில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதைக்களம். ஜனகராஜ், டில்லி கணேஷ், டி.எஸ்.ராகவேந்தர் என, துணை கதாபாத்திரங்களும், அழுத்தமான இருப்பை பதிவு செய்தனர்.

'ஜே.கே.பி.,க்கு, இரு மனைவியர்' என, 'கிளைமேக்ஸ்' யோசித்திருந்தாராம், பாலசந்தர். அவரின் உதவி இயக்குனராக இருந்த, வஸந்த் தான், படத்தில் இடம் பெற்றுள்ள முடிவை கூறினாராம். நல்ல விஷயம் தானே! ஒவ்வொரு காட்சியிலும், தான், 'இயக்குனர் சிகரம்' என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார், பாலசந்தர். இப்படத்தின் தொடர்ச்சியாக, சகானா எனும், 'டிவி' தொடரையும், 2003ல், பாலசந்தர் இயக்கினார்.

சிந்து பைரவி, காற்றில் என்றென்றும் தவழும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement