Advertisement

இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா?

Share

கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கை நிறைய படங்கள் வைத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி தான். ஹீரோவாகத் தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்காமல், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதென்றால் வில்லன் என்றாலும் சரி, குணச்சித்திர நடிகர் என்றாலும் சரி என ஒப்புக் கொள்வதால் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். இதனாலேயே தமிழ் மட்டுமின்றி தெலுக்கிலும், இந்தியிலும் நடித்து வருகிறார்.

ஒருபுறம் அவர் ஹீரோவாக நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் பட ரிலீசையும் அவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் புதுமுகம் டில்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சில புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வெள்ளை வேட்டி சட்டையில் அரசியல்வாதி தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார். ஒரு புகைப்படத்தில் பார்த்திபன் அருகே பவ்யமாக நிற்கிறார்.

இந்த புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பார்த்திபன் விஜய் சேதுபதியின் மாஸ்டர் பிளான் என்னவென்று கேட்டுள்ளார். மேலும், “நானும் ரவுடி தான், நீயும் ரவுடி தான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன? என்று தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அவ் வாழ்கொடுத்தால் குடிப்பர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement