Advertisement

இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி

Share

தமிழ் சினிமாவிற்கு ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரை தந்தது போன்று உலகநாயகன் எனும் கமல்ஹாசனை தந்ததும் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் தான். இவரின் 90வது பிறந்தநாளுக்கு கமல் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், கே.பாலசந்தர். என்னுடைய பதின்பருவத்தில் நான் கேட்ட பெரிய புகழைக் கொண்ட சிறிய பெயர். என்னைப் போன்ற ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவர் பல வேடங்களை ஏற்பார் என்று யாரும் நினைக்கவில்லை. கொடையாளர், வழிகாட்டி, ஒத்துழைப்பாளர், தந்தை. குழந்தை போன்ற அவரின் சுறுசுறுப்பை இப்போதும் எண்ணிப்பார்க்கிறேன். என் தந்தையின் பெருமையை உணர்கிறேன். இந்திய சினிமாவின் இந்த முக்கியமான மகனுக்கு எனது வணக்கங்கள். என பதிவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

    கமல்ஹாஸன் தோற்றத்தை பார்த்தால் நூறு வருடங்கள் முழுமையாக திரை உலகில் இருப்பார் என்று தெரிகிறதே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement