Advertisement

இயக்குனர் சிகரத்தின் 90வது பிறந்த நாள்: கே.பாலச்சந்தரின் நிறைவேறாத ஆசைகள்

Share

இயக்குனர் சிகரம் இன்று நம்மோடு இருந்திருந்திருந்தால் அவரது 90வது பிறந்த நாளான இன்று அவர் வீட்டு வாசலில் ரஜியும், கமலும் நின்றிருப்பார்கள். அவர் பெயரில் பிரகாஷ்ராஜ் தானதர்மம் பண்ணியிருப்பார், வசந்த் அவரைப் பற்றிய குறும்படம் ஒன்று உருவாக்கி வெளியிட்டிருப்பார், விவேக் கவிதை பாடியிருப்பார். சமுத்திரகனி உருகி இருப்பார்.

அவரும் இப்போது இல்லை. கொரோனா வைரஸ் யாரையும், எதுவும் செய்ய விடாமல் முடக்கி வைத்து விட்டது. இந்த நேரத்தில் கே.பாலச்சந்தரின் நிறைவேறாத ஆசைகள் இரண்டை பற்றி நினைவு கொள்வோம். பிற்காலத்தில் யாராவது நிறைவேற்றலாம்.

வண்ணப்படங்கள் வந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த காலம். அப்போது கே.பாலச்சந்தருக்கு ஒரு யோசனை தோன்றியது வண்ணங்களைக் கொண்டே ஒரு படத்தை உருவாக்குவது என்று. அந்தப் படத்திற்கு கலர்ஸ் என்று பெயரும் வைத்தார். கதைப்படி கதையின் நாயகனுக்கு கண்பார்வை தெரியாது. ஆனால் நிறம் மட்டும் தெரியும். ஒருவர் நீல நிற சட்டையும், வெள்ளை வேட்டியும் போட்டுக் கொண்டு ஹீரோ முன்னால் நின்றால் மேலே நீல நிறமும், கீழே வெள்ளை நிறமும் மட்டுமே அவருக்கு தெரியும். அவனுக்கு ஒரு காதல் வருகிறது. இதுதான் படத்தின் கதை சுருக்கம்.

இந்த படத்திற்காக மும்பையில் இருந்து பல கேன்கள் கலர் பிலிம்ங்களை வாங்கி வைத்திருந்தார் கே.பாலச்சந்தர். இந்த நேரத்தில்தான் கமலின் ராஜபார்வை வெளிவந்தது. அதில் அவர் பார்வையற்ற இசை கலைஞனாக நடித்திருந்தார். கலர்ஸ் படத்திலும் அவர் கமல்ஹாசனையே நடிக்க வைக்க நினைத்திருந்தார். ராஜபார்வையில் அவர் அப்படி நடித்து விட்டதால் வேறு எந்த ஹீரோவையும் வைத்து அந்த படத்தை எடுக்க முடியாது என்று அந்தப் படத்தை கைவிட்டு விட்டார்.

அடுத்த ஆசை அவரின் கடைசிகால ஆசை. தான் உருவாக்கிய ரஜினியையும், கமலையும் இணைத்து மீண்டும் ஒரு படம் உருவாக்க வேண்டும் என்பது. இதற்கான ஸ்கிரிப்டையும் எழுதினார். இதற்கான சில முன் முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அதற்கு பலன் இல்லாமல் போகவே அதை அப்படியே விட்டுவிட்டார்.

பார்க்கலாம் அவரது சீடர்களில் யாராவது இந்த இரண்டு ஆசைகளில் ஒன்றையாவது நிறைவேற்றலாம்.


மேலும் பாலசந்தர் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுக்கு அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://cinema.dinamalar.com/balachander/

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • யார்மனிதன் - Toronto,கனடா

  கலாச்சார சீரழிவுக்கு வித்திட்டவர் இந்த ஆள். தமிழ்நாட்டின் சாபக்கேடு ...மணிரத்னமும் இவர் போலவே

 • rasheed - ,

  comment லயன் மிகவும் நன்றாக பதிவு செய்து உள்ளாரே பாலச்சந்தர் திடீர்னு வரவில்லை இபொழுது வருகிறார் ஆண்ட மாதிரி இல்லையே அவர்கள் இமய மலை சரித்திரம் அவர்கள் வாழ்க்கை பள்ளி கூடம் வைக்கணும் வருங்கால சந்ததியார் தெரிய வேண்டும் அரசு கவனிக்க வேண்டும்

 • M.RAGHU RAMAN - chennai,இந்தியா

  இவர் மக்களுக்கு, ஏழைகளுக்காக, தாழ்த்தப்பட்ட இனத்திற்க்காக உழைத்த தேசிய தலைவரா.....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இயக்குனர் சிகரம் பலசரக்கு மாஸ்டர். இவருக்கு பிடிச்ச ஒரே கருத்து கண்ணகியும் மாதவியும் உள்ள கணவர் கதை தான் பிடிக்கும்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இது தவிர மேடை நாடுங்கள் மீண்டும் போடவேண்டும் என்று எல்லா ஏற்படுகளையும் செய்திருந்தார். நான் எனது தங்கை முன்னாள் தமிழ் இசை கல்லூரி முதல்வர் கலைமாமணி கிரிஜா ராமசாமி ( அரங்கேற்றம் படத்தில் கமலின் தங்கையாக நடித்த கிரிஜா, திரு கே பி யின் நெருங்கிய நன்மைபெறும் அதே வயதுடைய முன்னாள் இரயில்வே அதிகாரி ஓய்வு கலைமாமணி உடையார்பாளையம் ஆர் ஸ்ரீனிவாசன் , அவள் ஒரு தொடர்கதையில் பதிமூன்று குரல்களில் எட்டு குரல்களுக்கு சொந்தக்காரர் , அவரின் அழைப்பின் அவரது வீட்டுக்கு சென்றிருந்தோம், அப்போது அவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார், அப்போது என் தந்தையிடம் ( ஐவரும் என் தந்தை, மேஜர், நாகேஷ், முத்துராமன், ஐ எஸ் ஆர், , ஸ்ரீகாந்த் , திரு பி ஆர் கோவிந்தராஜன் இவர்கள் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ராகினி ரெக்ரியேஷன்ஸ் நாடகக் கம்பெனிதான் வளர்ந்து கலா கேந்திராகாவாக மாறியது, ) டேய் நீ இந்த நாடகத்தில் நடிக்கிறாயா நல்ல ரோல் இருக்கிறது என்கிறார். அது நிறைவேறவில்லை என்பது வருத்தம். வந்தே மாதரம்

 • Ponniyin Selvan - Thanjavur,இந்தியா

  தமிழகத்தில் தமிழர் கலாச்சாரமும், பண்பாடும் கெட்டு சீரழிந்ததில் இவனுக்கும் இவன் சிஷ்யன் காமஹாசனுக்கும் முக்கிய பங்கு உண்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement