Advertisement

மகனுக்காக விக்ரம் எடுத்த அதிரடி முடிவு

Share

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் ஆகியோரை இணைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இவர்கள் மூவரும் முதல் முறையாக இணையும் படம் இது என்பதால், அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் துருவ்வுக்கு வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ்வை மாஸ் ஹீரோ கேட்டகரிக்கு கொண்டு வருவதற்காக விக்ரம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னர் இருமுகன் படத்தில் விக்ரம் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா

    ... கும்பலுக்கு அடுத்த வாரிசு ரெடி பண்ணுகிறார்கள். நாம் ஒன்றிணைந்து இதை முறியடிப்போம்.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    தெலுகு திரையுலகம் போல தமிழ் திரையுலகம் வாரிசுகளின் சொர்கம் ஆக முயற்சிக்காதீர். தெலகு சினிமா, வாரிசுகளால் ஒரு கழிவு நீர் குட்டையாகி விட்டது. புது புது நடிகர், டைரக்டர், டெக்னீசியன், இசையமைப்பாளர் என்று பலரும் வரட்டும். வாழட்டும். வாரிசு கலாச்சாரம் ஒழியட்டும் .

  • rasheed - ,

    நல்ல சேதி எப்பொழுது நடிகர் பிரபலம் ஆனால் அவர்கள் மகன் முன்னுக்கு வரமுடியாது இந்த பார் மூல விக்ரம் தேவையா இவரு மகனை முன்னுக்கு கொண்டு வர ஆசை படுகிறார் ஆனால் கஷ்டம்தானே ரஷீத்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement