Advertisement

தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் 'ஓடிடி'

Share

கொரோனா ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் இல்லாத காரணத்தால் ஒடிடி தளங்களில் படங்களை வெளியிட ஆரம்பித்து அதன் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

தமிழில் 'பொன்மகள் வந்தாள்' படம் மூலம் அது ஆரம்பமானது. அந்தப்படமும் சரி, அதன்பின் ஓடிடியில் வெளிவந்த 'பெண்குயின்' படமும் ரசிகர்களை ஏமாற்றிய ஓடிடி படங்களாகவே அமைந்தன. தரத்தின் அடிப்படையில் இரண்டுமே மிக மிக சுமாரான படங்கள்தான் என ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள். விமர்சன ரீதியாக அந்தப் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால், ஹிந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படங்களாக அமைந்துள்ளன. நேற்று அப்படி ஓடிடி தளத்தில் வெளியான 'சுபியும் சுஜாதாவும்' படம் கூட நல்ல படமாக உள்ளது என்று பேச வைத்துவிட்டது. அதனால் தமிழ் ரசிகர்கள் தமிழில் மட்டும் இம்மாதிரியான படங்களை ஓடிடி தளங்கள் வெளியிடாமல் தரமற்ற படங்களை வெளியிடுகிறார்களே என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    சினிமா படம் என்பதே மாயை ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட விதத்தில் பேச்சு, சண்டை, எல்லா நடவடிக்கையும் இதில் என்ன நல்ல படம் கேட்ட படம். எம் ஜி ஆர் பாட்டாம் சிவாஜி பாட்டாம். அவர்கள் பாடவில்லை, இசை அமைக்கவில்லை, பாடல் வரிகள் எழுதவில்லை.

  • saravana madurai -

    பொன்மகள் வந்தால் அருமையான படம் ..

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    "பொன்மகள் வந்தாள்" ஒரு நல்ல படம் தான் என்று மற்ற விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். அரசியல், மத, சொந்த காரணங்களால் ஒரு கூட்டம் இதை தவறாக விமர்சிக்கிறது. "பென்குயின்" படம் படுகேவலமான, குப்பையோ, குப்பை படம். அதன் சஸ்பென்ஸும் (டிவிஸ்ட்) ஏற்கனவே வெளிவந்த HIT என்ற தெலுங்கு படத்தின் சஸ்பென்ஸும் ஒரேமாதிரி இருப்பதும் இன்னும் பரிதாபம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement