Advertisement

'ஆர்ஆர்ஆர்' ஜுலை 2021ல் ரிலீஸ் ?

Share

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் வெளியீடு முதலில் ஜுலை 30, 2020ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன் பின் 2021ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிக்கு மாற்றினார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் அறிவிக்கப்பட்ட தேதியான 2020ம் ஆண்டு ஜுலை 30லிருந்து ஒரு வருடம் தள்ளி 2021 ஜுலை 30ல் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம். இருந்தாலும் இன்னும் படத்தின் நாயகி ஆலியா பட் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி படமாகவில்லை. நோய் தொற்று பயம் நீங்கி எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. அது மேலும் தாமதமானால் படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜுலையில் கூட வெளிவர வாய்ப்பிருக்காது.

படத்தின் வெளியீடு மேலும் மேலும் தள்ளிப் போனால் படத்தின் பட்ஜெட்டில் கூடுதல் செலவாக வாய்ப்புண்டு. பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் இதனால் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement