Advertisement

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்

Share

பிரபலங்களின் சுயசரிதையை படமாக எடுப்பதும் நாட்டில் அவ்வப்போது நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை மையப்படுத்தி படங்கள் உருவாவதும் வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.. கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்த அதிர்ச்சிகரமான நிகழ்வும் அரங்கேறியது..

இதையடுத்து இந்த நிகழ்வும் தற்போது திரைப்படமாக மாற இருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் நேற்று வெளியாகியுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிப்பதுடன் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். உயிரிழந்த 20 வீரர்களின் தியாகத்தை உலகுக்கு பறைசாற்றும் இந்தப்படம் உருவாக இருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • K.ANBARASAN - muscat,ஓமன்

    வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement