Advertisement

ஜூலை-10ல் நித்யா மேனன் நடித்த வெப்சீரிஸ் ரிலீஸ்

Share

கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக தற்போதைய சினிமா உலகம், பல மாற்று முயற்சிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டது. அதில் முக்கியமானது டிஜிட்டில் தளங்களில் படங்களை வெளியிடுவது... அதேசமயம் இப்படி ஒரு சூழல் உருவாவாதற்கு முன்பே திரைப்படங்களுக்கு போட்டியாக, சொல்லப்போனால் அவற்றுக்கு இணையாக வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துவிட்டன. பிரபல நட்சத்திரங்களும் அவற்றில் ஆர்வமுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தவகையில் இந்தியில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடித்துள்ள 'பிரீத் ; இன்ட்டூ தி ஷேடோஸ்' என்கிற வெப்சீரிஸ் வரும் ஜூலை 1௦முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. மயன்க் ஷர்மா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.. ஆச்சர்யமான விஷயமாக நடிகர் நிழல்கள் ரவியும் இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் நடித்த அனுபவம் பற்றி நித்யா மேனன். கூறும்போது “சினிமாவில் முதல் படத்தில் நடிப்பதை விட இதில் நடிக்கும்போது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய அனுபவம் இந்த கதாபாத்திரம் மூலம் எனக்கு கிடைத்தது” என கூறியுள்ளார்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement